
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் லட்சக்கணக்கானோர் பலியானார்கள். இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த உலகில் உள்ள மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உட்பட அனைவரும் பல்வேறு ஆய்வுகளை செய்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற தீவிர முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. மேலும், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற தடுப்பூசிகளை வழக்கத்தில் கொண்டு வந்து கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில், சில நாட்களாக அதிக அளவில் கொரோனா பரவி கடந்த 1 வாரத்தில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், தற்போது இந்தியாவில் 93 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, ‘தமிழ்நாட்டை பொறுத்தவரை சந்தேகத்திற்கு இடமான நோயாளிகள் மற்றும் சில அறிகுறிகள் இருக்கக்கூடிய நோயாளிகள் தினந்தோறும் 10 பேருக்கு கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அந்த அடிப்படையில் வீரியமில்லாத கொரோனா என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. இதனால், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் கொரோனா பர