Published on 18/05/2025 | Edited on 18/05/2025

நெல்லையில் எரிந்த நிலையில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நெல்லை மாவட்டம் ஆரைக்குளம் பகுதியில் 65 வயதும் மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவரும், 35 வயது மதிக்கத்தக்க ஆணும் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்குச் சென்ற போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.தொடர்ந்து கைப்பற்றப்பட்ட சடலங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.