Published on 27/02/2019 | Edited on 27/02/2019


இந்தியாவை காப்போம் என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பாக இன்று மாலை கோவையில் உள்ள கொடிசியா மைதாைனத்தில் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் சி.பி.ஐயின் மூத்த தலைவர்கள் இரா.நல்லக்கண்ணு, தா.பான்டியன், சி.மகேந்திரன், மற்றும் தமிழ்நாடு செயலாளர் இரா.முத்தரசன், துணை செயலாளர்கள் திருப்பூர் சுப்பராயன், மு.வீரபான்டியன் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரை நிகழ்த்தினார்.