Skip to main content

ஜலசக்தி துறையின் கீழ் காவிரி ஆணையத்தை இணைப்பதற்கு எதிர்ப்பு! மாடுகளின் கழுத்தில் பதாகைகளை தொங்கவிடும் விவசாயிகள்!

Published on 30/04/2020 | Edited on 30/04/2020
m

 

ஏறத்தாழ 43 ஆண்டுகாலமாக உச்சநீதிமன்றத்தில் காவிரி நீரை பெறுவதற்கு தமிழகம் போராடிக் கொண்டிருக்கிறது. போராடியது மட்டுமல்லாமல் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு போராட்டங்களையும் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதை மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் ஒழுங்காற்று குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது. அதன்மூலம் வழிகாட்டு முறைகளையும் தீர்ப்பாக வழங்கியுள்ளது.  அதை மத்திய அரசு மதிக்கவில்லை.  மீண்டும் மீண்டும் தமிழகம் போராடியது. அதன் பிறகு காவிரி ஆணையம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது.


இவைகளுக்கு அதிகாரம் குறைவாக இருந்தாலும் கூட தமிழக மக்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதையும் ஏற்றுக் கொள்ள மனமில்லாத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தமிழக விரோத அரசாக மாறி உலக மக்கள் கவனம் முழுவதும் கரோனா பக்கம் இருக்கும் இன்றைய சூழ்நிலையில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, மத்திய அரசு காவிரி ஆணையத்தை மத்திய அரசின் ஜலசக்தி துறையின் கீழ் கொண்டு வந்துள்ளது. அதை வன்மையாக கண்டிக்கிறோம்.  அதை கைவிட வேண்டும் .

 

m

 

மத்திய அரசின் போக்கைக் கண்டித்து காவிரி டெல்டா பகுதியிலுள்ள அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட கடற்கரையோர கிராமமான கீழ் குளத்தூர் கிராமத்தில் விவசாயிகள் மத்திய அரசு ஜல சக்திதுறையில் காவிரி ஆணையத்தை இணைப்பதை கண்டித்து விவசாயிகள் தங்களின் மாடுகளின் கழுத்தில் தங்கள் கோரிக்கைகளை பதாகைகள் எழுதி தொங்கவிட்டு  எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.


இது குறித்து விவசாய சங்க தலைவர் தங்க. சண்முகசுந்தரம்,  காவிரி மேலாண்மை வாரியம் தற்போது மத்திய அரசின் ஜலசக்தி துறையின் கீழ் இணைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். ஜலசக்தி துறை எனப்படும் நீர்வள துறையோடு இணைக்கக் கூடாது.  இந்த நடவடிக்கை என்பது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை போல ஆகிவிடும். இதன் மூலம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்படும்.  மத்திய அரசு இந்த செயல் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. கர்நாடக பாரதிய ஜனதா அரசுக்கு ஆதரவாக இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்கிறார் சண்முகசுந்தரம்.

மேலும், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் போர்க்காலத்தில் இதுபோன்ற பேரிடர் காலத்தில் மத்திய அரசு இது போன்ற செயல்களை செய்வதை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சத்தமின்றி  உத்தரவை பிறப்பித்துள்ளதாக விவசாயிகள் கோபத்துடன் தெரிவிக்கிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஒப்புதல் கொடுத்த மத்திய அரசு; உடனடியாக செயல்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்!

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
Ramadoss welcomed  central govt approval of the plan to clean up  Cauvery river

காவிரி ஆற்றை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் காவிரி ஆற்றை தூய்மைப்படுத்துவதற்கான  ”நடந்தாய் வாழி காவிரி” திட்டத்தை செயல்படுத்துவதற்கு  மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருக்கிறது.  ஐந்தாண்டுகளுக்கும் மேலாக  கிடப்பில் போடப்பட்டிருந்த காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு  மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பது வரவேற்கத்தக்கது.

பெங்களூரு நகரிலும், அதையொட்டிய பகுதிகளிலும் உள்ள வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து ஒவ்வொரு நாளும் 150 கோடி லிட்டர் கழிவுகள் காவிரியில் கலக்கவிடப்படுகின்றன.  தமிழ்நாட்டில்  தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் போன்றவற்றில் இருந்து காவிரியில்  பெருமளவில் கழிவுகள் கலக்கவிடப்படுகின்றன. மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலையிலிருந்து மட்டும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென், நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் டையாக்சின் உள்ளிட்ட 28 வகையான நச்சுப்பொருட்கள் காவிரியில் கலக்க விடப்படுகின்றன. பொதுமக்கள் புனித நீராடும் கும்பகோணத்தில் மட்டும் 52 வகை நச்சுப்பொருட்கள் இருப்பதாக ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்த அளவுக்கு பாழ்பட்டு போன  காவிரியை தூய்மைப்படுத்த வேண்டியது கட்டாயமாகும்.

காவிரியைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.  இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ’காவிரியைக் காப்போம்' என்ற தலைப்பில் கடந்த, 2017-ஆம் ஆண்டு ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை  விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்டேன். புனித நதியாக போற்றப்படும் காவிரி, நச்சு நதியாக மாறி வருவதை  நாம்  தொடர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு மொத்தம் ரூ.11,250 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியை மத்திய  அரசிடமிருந்து  மானியமாகவும், இன்னொரு பகுதியை  தமிழக அரசின் பங்களிப்பாகவும் கொண்டு, மீதமுள்ள தொகையை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து கடனாகப் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மத்திய அரசு, பன்னாட்டு நிறுவனங்களின் நிதிக்காக காத்திருக்காமல்  தமிழக அரசு அதன் சொந்த நிதியில்  காவிரியை தூய்மைப்படுத்தும் பணிகளைத் தொடங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
Increase in water flow in Cauvery

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தமிழக கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவானது அதிகரித்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து 3,000 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 30 வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தர் தலைமையில் கடந்த 21 ஆம் தேதி (21.05.2024) நடைபெற்றது. அப்போது தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடக அரசு காவிரியில் இருந்து திறக்க வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.