விதிமீறல் கட்டிடங்களுக்கான மின்சாரம், குடிநீர் இணைப்புகளை உடனடியாகதுண்டிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு ஆணைபிறப்பித்துள்ளது.

Advertisment

hh

சென்னை மண்ணடி பகுதிகளில் விதிமீறல் கட்டிடங்கள் அதிகரித்துவருவதாக தொடரப்பட்ட வழக்ககில் உய்ரநீதிமன்றம் உத்தரவு.

மேலும், “ஆக்கிரமிப்புகளும், விதிமீறல் கட்டிடங்களும் புற்றுநோய் போல் பரவி வருகிறது, அதிகாரிகள் முறையாக கண்காணிக்காவிட்டால் விதிமீறல்களை தடுக்க முடியாது. மாநகராட்சி அதிகாரிகளின் உதவி இல்லாமல் விதிமீறல்களில் யாரும் ஈடுபட முடியாது" என்று தெரிவித்தனர்.மேலும் விதிகளை மீறுபவர்களை நீதிமன்றம் பாதுகாக்காது. என்றும், நேர்மை, அர்ப்பணிப்பு, மனப்பான்மையுடன் பணியாற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் மாநகராட்சி அதிகாரிகள் பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும்நாள் வரையிலான சொத்து விவரங்களை இணையதளத்தில்பதிவேற்றம் செய்யவும், வெளியிடவும் உய்ரநீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு ஆணைபிறப்பித்து, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதுசென்னை உயர்நீதிமன்றம்.