Skip to main content

பூனை சாப்பிட்ட பப்ஸ் விற்பனை; பிரபல திரையரங்கில் ஷாக்

Published on 29/05/2023 | Edited on 29/05/2023

 

Cat Eaten Pubs For Sale; Officials are in action at the theater restaurant

 

சிவகங்கையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பூனை சாப்பிட்டுவிட்டு வைத்த பப்ஸை விற்பனைக்கு வைத்ததாக புகார் எழுந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

சிவகங்கை மாவட்டம், நகர் நோன்பு திடல் அருகே 'சத்தியன்' திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கத்தில் நேற்று காலை காட்சியின் போது அங்குள்ள உணவு ஸ்டாலில் வைக்கப்பட்டிருந்த பப்ஸை பூனை ஒன்று சாப்பிட்டது. இதனை ரசிகர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து அந்த காட்சிகள் வைரலானது.

 

இந்த நிலையில் இது தொடர்பான புகார்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு சென்ற நிலையில், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரபாவதி தலைமையிலான அதிகாரிகள் திரையரங்கில் சென்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பப்ஸ், கேக், சமோசா, கூல்டிரிங்ஸ், பாப்கார்ன் போன்றவற்றை ஆய்வு செய்தனர். இதில் பல பொருட்கள் காலாவதியாக இருந்தது தெரியவந்தது. உடனே அந்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள் விற்பனையாளர்களை எச்சரித்துவிட்டு சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சோதனை செய்யும் பறக்கும் படை அதிகாரிகள் மீது நடவடிக்கை'- தேவநாதன் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Action on Test Flying Officers'- Devanathan's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் திருவரங்குளம், வம்பன், குளவாய்ப்பட்டி உட்பட பல கிராமங்களில் பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் வாக்கு சேகரிக்க பிரச்சாரம் செய்தார். வேட்பாளரின் பிரச்சார இடங்களுக்கு வந்த தேர்தல் பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் வேட்பாளர் வாகனத்தை சோதனை செய்ய கேட்டனர்.

அதேபோல திருவரங்குளத்தில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கூட்டத்திற்குள் பறக்கும் படை வாகனம் வந்ததும் பிரச்சாரத்தில் பேசிக்கொண்டிருந்த தேவநாதன், 'இது திமுக தேர்தல் இல்லை நாடாளுமன்றத் தேர்தல். தொடர்ந்து எங்கள் பிரச்சாரத்தில் இடையூறு ஏற்படுத்துவது போல அதிகாரிகள் கூட்டத்திற்குள் வருகின்றனர். தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும் இந்த அதிகாரிகள் மீது புகார் கொடுப்போம். நடவடிக்கை இல்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.

தேர்தல் விதிமுறைகளின் படி பறக்கும்படை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்வது வழக்கமானது தான் ஆனால் தேவநாதன் அதிகாரிகளை மிரட்டுவது போன்று பேசுகிறார் என்கின்றனர் அதிகாரிகள்.

Next Story

'இன்னைக்கு ஒரு புடி' தாத்தா மருத்துவமனையில் அனுமதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
nn

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான தாத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூடியூப் சேனல் சமையலுக்கு மிகவும் பிரபலமானது. ஒரு குழுவாகச் சேர்ந்து உணவை சுவாரசியமாக சமைத்து சாப்பிடும் இந்த யூடியூப் சேனல் இந்திய அளவில் அதிக சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட சேனல்களில் ஒன்றாகும்.

அண்மையில் ராகுல்காந்தி உள்ளிட்ட பலர் இந்த சேனலில் உணவு சமைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலப்படுத்தி இருந்தனர். இந்த யூடியூப் சேனலில் அனைவரும் இளைஞர்கள் என்ற நிலையில், மிகவும் குறிப்பிடத்தகுந்த முதியவர் பெரியதம்பி தாத்தா. 'இன்னைக்கு ஒரு புடி' என்ற வசனம் மற்றும் உடல் மொழியால் பலர் மனதில் இடம் பிடித்தவர்.

இந்நிலையில், முதியவர் பெரியதம்பி தாத்தா தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. சேனலை நடத்தும் சுப்பிரமணியன் வேலுசாமி இது குறித்து வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் 'தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.