Published on 08/04/2022 | Edited on 08/04/2022

மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பேசிய பாஜக நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக பிரச்சார அணித் தலைவர் ஜெயப்பிரகாஷ் மீது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாகப் பேசியது தொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஜெயபிரகாஷை கைது செய்ய இரணியலில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்ற நிலையில், அங்கு ஜெயபிரகாஷின் ஆதரவாளர்கள் மற்றும் அவர் சார்ந்துள்ள பாஜக கட்சியினர் திரண்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர்.