Skip to main content

லீவு கிடைக்கும் என்பதற்காகவே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றனர்: திண்டுக்கல் சீனிவாசன்!

Published on 22/06/2018 | Edited on 22/06/2018


லீவு கிடைக்கும் என்பதற்காகவே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றனர் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, சட்னியும் சாப்பிடவில்லை நாங்கள் பொய் சொன்னோம் என்று கூறியதில் ஆரம்பித்த அவர் ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, டிடிவி.தினகரன் திருடினார் என்று சமீபத்தில் பேசி அதிமுகவினரேயை அதிர வைத்தார்.

இந்நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சை பேச்சை அமைச்சர் அரங்கேற்றியுள்ளார். சிவகங்கை அரண்மனை வாசல் முன் காவிரி மேலாண்மை ஆணையம் பெற்றுத்தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.
 

 

 

இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், நம்பிக்கையில்லா தீர்மானம் உள்பட அனைத்திலும் இந்த ஆட்சி வெற்றி பெற்று வருகிறது. ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்பதற்காக எதற்கெடுத்தாலும் போராட்டம் தூண்டி விடப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் கிராமங்களிலும் பரவியது. மாணவர்கள் தூண்டி விடப்பட்டு போராடுகின்றனர். ஏதோ ஒரு போராட்டம்.. லீவு வேண்டுமே என நம்முடைய குழந்தைகளும், குட்டிகளும், கல்லூரி மாணவர்களும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என அவர் பேசினார்.

தமிழகத்தில் நடந்த தன்னெழுச்சி உணர்வுப்பூர்வ போராட்டம் என்ற பெயரை பெற்று தந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெறும் லீவுக்காக மாணவர்கள் பங்கேற்றார்கள் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசம் விமர்சனம் செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“போன முறை மாம்பழத்தோடு எங்க கூட இருந்தீங்க... இந்த முறை அவங்களோட இருக்குறீங்க” - சீனிவாசன் கிண்டல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Dindigul Srinivasan taunts pmk candidate

திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சச்சிதானந்தமும், அதிமுக கூட்டணியில்  உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவரும் வேட்பாளருமான முகமது  முபாரக்கும், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் திலகபாமா உள்பட சில சுயேட்சைகள் போட்டிப் போடுகிறார்கள்.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வந்தது. இதில் பா.ம.க. வேட்பாளர் திலகபாமா தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். அதேபோல் அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரான எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகமது முபாரக், முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோருடன் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பூங்கொடியிடம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

Dindigul Srinivasan taunts pmk candidate

அதேபோல் ஆளுங்கட்சியான திமுக கூட்டணி வேட்பாளரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சச்சிதானந்தத்துடன் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினரும், கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஐ.பி. செந்தில்குமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான பாலகிருஷ்ணன் தலைமையில் தேர்தல் அதிகாரியான பூங்கொடியிடம் சி.பி.எம்.  சச்சிதானந்தம் வேட்புமனு தாக்கல் செய்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். இப்படி மூன்று கட்சிகளும் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Dindigul Srinivasan taunts pmk candidate

இந்த நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை ஒரு பக்கம் சரிபார்ப்பு பணியும் நடந்து கொண்டிருந்தது. அப்போது, முதலில் வேட்புமனு தாக்கல் செய்த பா.ம.க. வேட்பாளர் திலகபாமா ஒரு அறையில் உட்கார்ந்துவிட்டு வெளியே வரும்போது, அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு வந்த முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன், திலகபாமாவை பார்த்த உடன் நீங்களும் இங்கேயா இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா... என்று கேட்டவாறே, கடந்த முறை மாம்பழம் சின்னத்தில் எங்களோடு இருந்தீங்க. இந்த முறை அவங்களோட இருக்குறீங்க... என்று கிண்டலடித்தவாறே திலகபாமாவிடம் கேட்டார். அதைத் தொடர்ந்து உடன் வந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் சிலரும் திலகபாமா உட்பட உடன் வந்தவர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story

ஜல்லிக்கட்டு பார்க்கச் சென்ற இளைஞர் காளை முட்டி உயிரிழப்பு

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
A youth who went to see Jallikattu was lose their live by a bull

தமிழ்நாட்டிலேயே அதிகம் ஜல்லிக்கட்டு நடக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தென்னலூர் என்கிற திருநல்லூரில் தான் அதிகமான வாடிவாசல்கள் கொண்ட ஜல்லிக்கட்டு திடல் உள்ளது. ஒரே நேரத்தில் ஏராளமான வாசல்களைத் திறந்து காளைகளை வெளியே விட்ட ஊர் இது. இந்த ஊரில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி திங்கள் கிழமை (12/02/2024) நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 737 காளைகள் அவிழ்க்கப்பட்டது.

200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். பல மாவட்டங்களில் இருந்தும் காளைகளும் காளையர்களும் வந்திருந்தனர். இதில் கந்தர்வக்கோட்டை தொகுதி கொத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற இளைஞரை காளை தூக்கி பந்தாடிய நிலையில், காளை நெஞ்சில் குத்தியதால் பலியானார். மேலும் மாடுபிடி வீரர்கள் 19 பேர் உள்பட 79 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.