Skip to main content

கொளுத்திப்போட்ட திருநாவுக்கரசர் - பதவி போயிடுமோ... பதட்டத்தில் அமைச்சர்கள்...

Published on 03/06/2019 | Edited on 03/06/2019

 

பத்தாண்டுகளாக தன் வசம் இருந்த திருச்சி எம்.பி. தொகுதியை இழந்திருக்கிறது அதிமுக. குறிப்பாக அதிமுகவிற்கு எப்போதுமே சாதகமான, இரண்டு அமைச்சர்களைக் கொண்ட ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு தொகுதிகள் சறுக்கலைத் தந்துள்ளன. 
 

20 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக கோட்டையாக திகழும்  ஸ்ரீரங்கம் தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சராக இருக்கிறார் வளர்மதி. இங்கு தேமுதிக வேட்பாளர் இளங்கோவனுக்கு 50,128 வாக்குகளே கிடைத்தன. இதே தொகுதியில் வளமர்மதி 1,08,400 வாக்குகளுடன் பெற்றிருந்ததைக் கணக்கிட்டால், இது 58,272 வாக்குகள் குறைவு. 


 

 

அதேபோல், வெல்லமண்டி நடராஜன் திருச்சி கிழக்கு தொகுதியில் 2016 தேர்தலில் 79,938 வாக்குகளுடன் வெற்றி பெற்று அமைச்சரானார். இந்தமுறை 25,283 வாக்குகள் மட்டுமே கிடைத்தன் மூலம் 54,655 வாக்குகள் குறைந்திருக்கிறது. 

 

Vellamandi N. Natarajan - S. Valarmathi - Su. Thirunavukkarasar


 


திருநாவுக்கரசரின் திருச்சி வெற்றியை அதிமுக தலைமையால் ஜீரணிக்க முடியவில்லை. போதாக்குறைக்கு நன்றி அறிவிப்பின்போது, எனக்கு வாக்களித்த அதிமுகவினருக்கு நன்றி என்று திருநாவுக்கரசர் கொளுத்திப்போட்டது, அதிமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல், தன் தொகுதியில் லட்சத்துக்கும் நெருக்கமான வாக்கு லீடிங்குடன் அசத்தி இருக்கிறார் திருச்சி மேற்கு எம்எல்ஏ கே.என்.நேரு.
 

 

 

இந்த நிலையில் டெண்டர், கமிசன் என போட்டி போட்டு வாங்கிய இந்த இரண்டு அமைச்சர்களும் சேர்ந்தவாறு ஒரு லட்சத்து 13 ஆயிரம் வாக்குகளை இழந்திருப்பதன் மூலம் தங்கள் மீதான நம்பிக்கையை பறிகொடுத்துவிட்டனர். இதையெல்லாம் கவனித்துள்ள தலைமை, அமைச்சரவை மாற்றத்தின்போது திருச்சியையும் சீரியஸாக கவனத்தில் எடுக்கும் என ர.ர.க்கள் பேசிக்கொள்கிறார்கள். 
 

சார்ந்த செய்திகள்