Skip to main content

“உங்களுக்கு முன்னால் நாங்கள் அங்கே நிற்போம்” - ஓபிஎஸ் ஆவேசம்

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

OPaneerselvam rant at admk advisory meeting

 

அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில் சென்னை எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில், நேற்று (20-02-2023 திங்கட்கிழமை) காலை 10-00 மணிக்கு நடைபெற்றது.

 

அந்த கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “திராவிடர் இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக அதிமுகவை உருவாக்கினார்கள். எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தை உருவாக்கினார்களோ அதை ஜெயலலிதா நிறைவேற்றினார். அதிமுக, தொண்டர்களுக்கான இயக்கமாக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டது. எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு 16 ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் ஜெயலலிதா.

 

தொண்டர்கள் சேர்ந்து தலைமை பதவியை தேர்வு செய்ய வேண்டும் என்று அதிமுகவில் சட்ட விதியை கொண்டு வந்தார் எம்ஜிஆர். இதன் அடிப்படையிலேயே ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை கொண்டு வந்தோம். அந்த பதவிகளை அடிப்படையாக வைத்தே 2021 வரை நடந்த அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுபவர்களுக்கு அதிகாரம் வழங்குகிற பணியை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அளித்தோம். தேர்தல் சின்னத்தை வழங்கும் முறையும் ஒருங்கிணைப்பாளர்கள் கையெழுத்திட்டு அளிக்கும் முறை இருந்தது. அந்த சட்ட விதியை எந்த அளவிற்கு சிதைக்க வேண்டுமோ அந்த அளவிற்கு சிதைத்துவிட்டார்கள்.

 

ஜனநாயக நடைமுறையை தூக்கி எறிந்துவிட்டு தன் இரும்புப் பிடிக்குள் இந்த இயக்கத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என நடக்கிறார்கள். இரட்டை இலை சின்னம் வெற்றி பெற ஆதரவாக நின்று பாடுபடுவோம் என அறிக்கை விட்டோம். வேட்பாளரை வாபஸ் பெற்றோம். ஆனால் எந்த மரியாதையும் இல்லை. ஓட்டு கேட்டு போகும்போது என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.

 

சாதாரண தொண்டன் முதலமைச்சராக ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டேன். அதேபோல், நாங்களும் ஒரு தொண்டனை ஒருங்கிணைப்பாளராக இணை ஒருங்கிணைப்பாளராக முதலமைச்சராக அடையாளம் காட்ட வேண்டும். எதற்கும் அஞ்சாதீர்கள். துணிந்து நில்லுங்கள். உங்களுக்கு முன்னால் நாங்கள் அங்கே நிற்போம். எதிர்வரும் கணைகளை நாங்கள் தாங்குவோம். உங்களை காப்பாற்றுவோம்.

 

 

 

சார்ந்த செய்திகள்