Skip to main content

திமுகவினர் மீது குஷ்பு தலைமையில் புகார்...!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021
Khushbu-led complaint against DMK

 

சென்னையில் பாஜக சார்பில் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். நேற்று மாலை குஷ்பு தலைமையில் சென்னை போலீஸ் கமிஷ்னர் மகேஷ் குமார் அகர்வாலை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். புகார் மனுவில் பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் கையெழுத்து போட்டிருந்தார்.

 

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது; “கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதியில் தேசிய வாக்காளர் பேரவை சேர்ந்தவர்கள் வாக்காளர்காளை சந்தித்து, தவறாமல் வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது திமுக மற்றும் விசிகவை சேர்ந்த 5 பேர் தேசிய வாக்காளர் பேரவையினரை தாக்கி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு வழக்கும் பதிவு செய்துள்ளனர். ஆனால் அவர்களை கைது செய்யவில்லை. அவர்களை கைது செய்ய வேண்டும்” என புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டது.

 

இதே கருத்தை வலியுறுத்தி கரு.நாகராஜன் நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். பின்னர் பேசிய குஷ்பு, “என்னை வெளிமாநிலத்தை சேர்ந்தவள் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள். நான் வெளிமாநிலத்தை சேர்ந்தவள்தான், ஆனால் இந்தியாவில் பிறந்தவள் ‘இந்திய பிரஜை’. 35 ஆண்டுகளாக சென்னையில் வாழ்கிறேன், தமிழ் மண் மீது எனக்கும் உரிமை உண்டு என தெரிவித்தார். அப்போது பாஜக மாநில வழக்கறிஞகள் பிரிவு தலைவர் பால்கனகராஜ், சென்னை மாநகரின் முன்னாள் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்