Skip to main content

தேர்தலில் போட்டியிட கமல்ஹாசன் கட்சியில் ஆட்கள் இல்லை - ராஜேந்திரபாலாஜி

Published on 31/08/2018 | Edited on 31/08/2018
BALAJI


 

 

எந்த தேர்தல் நடந்தாலும் போட்டியிட கமல்ஹாசன் கட்சியில் ஆட்கள் இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
 

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் செய்தியாளர்களை சந்தித்தார் ராஜேந்திர பாலாஜி. அவரிடம், இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் எங்களுக்கு தயக்கம் இல்லை என கமல் கூறியது, விஷால் புதிய அமைப்பை தொடங்கி, அரசியல் குறித்து பேசியது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. 
 

அதற்கு பதில் அளித்த அவர், 
 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஆனால் எதிர்க்கட்சிகள் அரசு மீது வீண் பழி சுமத்தி பொய் பிரசாரம் செய்கிறது. அதனை முறியடிக்கவே அ.தி.மு.க. சைக்கிள் பேரணி நடத்துகிறது. இதனால் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டுள்ளது.
 

 

 

நடிகர் கமல்ஹாசன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் இந்த தேர்தலில் மட்டுமல்ல, எந்த தேர்தல் நடந்தாலும் போட்டியிட மாட்டார். ஏனென்றால் தேர்தலில் போட்டியிட அவரது கட்சியில் ஆட்கள் இல்லை. 
 

நடிகர்கள் ஆசைப்பட்டு அரசியலுக்கு வருகிறார்கள். எத்தனை நடிகர்கள் கட்சிகளை தொடங்கினாலும் தமிழகத்தை திராவிட கட்சிகள்தான் ஆளும். எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவுக்கு இருந்த மக்கள் செல்வாக்கு தற்போதுள்ள நடிகர்களுக்கு இல்லை.
 

அழகிரி திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிட்டால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால் அது அம்மாவின் கோட்டை. அங்கு அ.தி.மு.க. அமோக வெற்றிபெறும். இவ்வாறு கூறினார். 
 

 

சார்ந்த செய்திகள்