Published on 23/07/2022 | Edited on 23/07/2022

இந்திய குடியரடிசுத் தலைவரான ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் நாளை மறுதினம் (24ம் தேதி) முடிவடைகிறது. எனவே அவருக்கு இன்று (23ம் தெதி) நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா நடைபெறுகிறது. இதில், கலந்துகொள்வதற்காக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ளார். மேலும், அவர் புதிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவியேற்பு விழாவிலும் கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்முவை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.