Skip to main content

பில்கிஸ் பானு வழக்கு; மஹுவா மொய்த்ரா மேல்முறையீடு

Published on 23/08/2022 | Edited on 23/08/2022

 

supreme court

 

பில்கிஸ் பானு வழக்கில் அரசியல் தலைவர்கள் கொடுத்த மனுக்கள் விசாரிக்கப்படும் என நீதிபதி உறுதியளித்துள்ளார்.

 

குஜராத்தில் 2004ம் ஆண்டில்  நடைபெற்ற ஹோத்ரா  ரயில் நிலைய ரயில்  எரிப்பு கலவரத்தில் 700க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும் ஐந்து மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கொடூரமாக கூட்டுப்பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்டார் . அவரது குடும்பத்தாரும் படுகொலை செய்யப்பட்டனர்.  இவ்வழக்கில் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்ட 11 பெரும் சுதந்திர தினவிழாவின் போது விடுதலை செய்யப்பட்டனர். குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்தது. 

 

குஜராத் அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, சிபிஎம் கட்சியின் சுபாஷினி அலி பலர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அவற்றை விரிவாக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர்கள் அபர்ணா பட், கபில் சிபில் ஆகியோர் நீதிபதி ரமணாவிடம் முறையிட்ட போது உரிய ஆவணங்களை பார்த்து வழக்கு பட்டியலிடப்படும் எனவும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகவும்  உறுதியளித்தார்.  

 

சார்ந்த செய்திகள்