Skip to main content

பாஜகவின் 'ரோட் ஷோ'... வீடு வீடாக சென்று அமித்ஷா வாக்கு சேகரிப்பு...

Published on 07/03/2021 | Edited on 07/03/2021

 

 Amit Shah goes door to door collecting votes ...

 

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு,தேர்தல் அறிக்கை என அரசியல் கட்சிகள் பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

 

இத்தகைய அரசியல் சூழ்நிலையில் இன்று கன்னியாகுமரி வந்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. முன்னதாக  கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் நாகர்கோவில் வந்த அமைச்சர் அமித்ஷா, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். இதனால் அந்த கோவில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆலய வழிபாட்டுக்கு பிறகு ஆலயத்திற்கு அருகில் உள்ள ரதவீதியில் அமித்ஷா பாஜக நிர்வாகிகளுடன் வீடு வீடாகச் மக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து வாக்கு சேகரித்தார். அவருடன் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் இடைத்தேர்தலில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். 

 

இதன் பிறகு நாகர்கோவிலில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று பூர்ணகும்ப மரியாதை ஏற்றுக்கொள்ள இருக்கிறார். அதேபோல் பாஜக சார்பில் 'ரோட் ஷோ'வில் வாகன பிரச்சார நிகழ்ச்சியிலும் பங்கேற்க இருக்கிறார் அமித்ஷா. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயதரணி உள்ளே; பொன்னார் வெளியே! - பாஜகவின் மாஸ்டர் ப்ளான்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Pon Radhakrishnan setback in BJP due to Vijayadharani arrival

கடந்த மூன்று முறையாகத் தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான காங்கிரஸைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இது, காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விஜயதாரணி, 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும், அது கிடைக்காமல் போன பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியாவது கிடைக்கும் என நினைத்து இலவு காத்த கிளியாக இருந்தார் எனச் சொல்லப்பட்டது. ஆனால், சமீபத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது.

அதேபோல, தமிழக சட்டமன்ற குழுத் தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கும் ஒதுக்கப்பட்டது. மேலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால், விஜயதாரணி அதிருப்தியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

முன்னதாகவே அவர் டெல்லியில் முகாமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், தற்போது இன்று பிற்பகல் 2 மணிக்கு டெல்லியில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் தற்போது விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளார். பொதுவாக சிட்டிங் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பாஜகவில் இணைந்தால் ஜெ.பி.நட்டாவை சந்திப்பது வழக்கம்.

அதேபோல் விஜயதாரணியும் ஜெ.பி.நட்டாவை சந்திப்பார் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இது புதிதாக காங்கிரஸ் மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற செல்வப் பெருந்தகைக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. எவ்வளவோ அணை கட்டிப் பார்த்தும் செல்வப் பெருந்தகைக்கு பிடிகொடுக்காமல் இருந்து வந்த விஜயதாரணி, இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளது. புலி வருது புலி வருது கதையாய், கடந்த ஒரு மாதகாலமாக அரசல்புரசலாக பேசப்பட்டு வந்த விஜயதாரணி கட்சித் தாவல் கதைக்கு தற்போது எண்டு கார்டு போடப்பட்டுள்ளது.

இதன்பிறகு விஜயதாரணி நிருபர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சியில் கிடைத்த மோசமான அனுபவத்தால் பா.ஜ.கவில் இணைந்துள்ளேன். பாஜக பாத யாத்திரையால் தமிழக பா.ஜ.கவில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. மோடி தலைமையில் என்னை போன்ற பெண்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கட்சியில் இணைந்தேன். இவ்வாறு அவர் கூறினார். மறுபுறம் பாஜகவின் தமிழக பொறுப்பாளரான அரவிந்த் மேனனை சந்தித்த விஜயதரணி, வரும் லோக்சபா தேர்தலில் சீட்  தரவேண்டும் எனக் கேட்டுள்ளார். அதில் நான் தோற்றுப் போனால் தன்னை ராஜ்யசபா எம்பியாக்க வேண்டும் என டிமாண்ட் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்போது, மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பாக எம்பி சீட் கொடுக்க வேண்டும் எனும் நிர்ப்பந்தம் எழுந்துள்ள நிலையில், மக்களுக்கு நல்ல பரிட்சயமான தலைவராக இருக்கும் பொன் ராதாகிருஷ்ணனுக்கு பாஜக வேறு திட்டங்களை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பாஜகவை கன்னியாகுமரி பகுதியில் வளர்த்தவர் எனும் இமேஜ் தேசியத் தலைமைக்கு இருப்பதால், அவருக்கு கவர்னர் பதவி தேடிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

முன்னாள் தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் கவர்னராக பதவி வகித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பன்வாரிலால் புரோஹித், பஞ்சாப் கவர்னர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், பஞ்சாப் கவர்னர் பதவியை பொன் ராதாகிருஷ்ணனுக்கு கொடுக்க இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இன்னொரு தரப்பினர், மாநிலத் தலைமையுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் பொன்னாரை ஓரங்கட்ட நடக்கும் அரசியல்தான் இது என்றும் கமலாலயத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. மார்ச் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் இதற்கெல்லாம் முடிவு கிடைத்துவிடும்.

Next Story

தேதி கொடுத்த அமித்ஷா; தயாராகும் தமிழக எம்பிக்கள்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Amitsha who gave the date; Preparing Tamil Nadu MPs

அண்மையில் சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மத்தியக் குழுவும் ஆய்வு செய்த நிலையில், மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரணத் தொகையை கோரியிருந்தது.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 04/01/2024 அன்று தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தமிழக அரசு கோரியிருந்த வெள்ள நிவாரண தொகையான 37,907.19 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் ஜனவரி 13ஆம் தேதி தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என நேரில் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி எம்பிக்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.