Skip to main content

இளைஞர்கள் வன்புணர்வு செய்ய காரணம் இதுதான்- பாஜக பெண் எம்எல்ஏ

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
haryana


அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டம் குருகிராம் நகரைச் சேர்ந்த 19 வயது மாணவி சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடியிடம்  விருது பெற்றவர்.
 

இவர் கடந்த புதன்கிழமை சிறப்பு வகுப்புக்கு சென்றுவிட்டு திரும்பியபோது, 12 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாணவியின் புகாரை போலீசார் வாங்க மறுத்துள்ளனர். பின்னர் அவர் காவல்துறை அதிகாரியிடம் புகாரை அளித்துள்ளார். 

 
பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கூறம்போது, எனது மகள் நல்ல புத்திசாலி. நன்றாக படிப்பாள். சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக பிரதமர் மோடியிடம் விருது பெற்றார். இப்போது என்னுடைய மகளின் நிலைமையை பாருங்கள். ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார்.
 

மோடி ஜி பெண்களை படிக்க வையுங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்போம் என்கிறார். ஆனால் எப்படி? என் மகளுக்கு  நீதி கிடைக்க வேண்டும். பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்று சொன்னீர்களே மோடி ஜீ. என் மகளுக்கு நீதி கிடைக்குமா? போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி உள்ளார்.

 
அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் "குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என கூறி உள்ளார்.
 

இந்நிலையில் இச்சம்பவத்தை பற்றி பாஜக எம்எல்ஏ பிரேமலதா கூறுகையில்,” இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்தால்தான் பாலியல் வன்புணர்வுகள் போன்ற குற்றங்களை செய்கிறார்கள் என்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்