Skip to main content

“பாலியல் குற்றங்களுக்கு எதிராக இந்தியாவில் கடுமையான சட்டங்கள் உள்ளன!’’  -ஐ.நா.வில் அமைச்சர் ஸ்மிருதிராணி

Published on 03/10/2020 | Edited on 03/10/2020
dddd

 

 

அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள ஐக்கியநாடுகள் சபையில் பெண்களுக்கான 25-ஆம் ஆண்டு விழா நடந்து வருகிறது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்தும் பெண் அமைச்சர்கள், பெண்கள் அமைப்பின் தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். நேற்று (அக்டோபர்-2 ) நடந்த நிகழ்வில் இந்தியா சார்பில், மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதிராணி கலந்துகொண்டார்.

 

நிகழ்வில் பேசிய ஸ்மிருதிராணி, “பெண்கள், குழந்தைகளுக்கான வளர்ச்சி மற்றும்  பாதுகாப்பு உள்ளிட்ட பயணத்தில் பெண்களுக்கான முழு அதிகாரத்தை அங்கீகரிப்பதிலும் பாலின சமத்துவத்தை அளிப்பதிலும் இந்தியா உயர்ந்து நிற்கிறது. இந்த செயல்திட்டங்களுக்கான நடவடிக்கைகள், கரோனா நெருக்கடி காலக்கட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ளன.

 

பெண்களுக்காக மருத்துவம், சட்டம், காவல்நிலையம், பாதுகாப்பு காரணிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்குமான சிறப்பு மையங்கள் நாடு முழுமைக்கும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்கி அதனை மேம்படுத்த, ‘தேசிய ஊட்டச்சத்து திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த இரு வருடத்துக்குள் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத நாடாக இந்தியா உருவாகும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைக்க இந்திய சட்டங்கள் வழிவகுக்கின்றன. இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளன” என்று உறுதியளிக்கு வகையில் பேசியுள்ளார் மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாதவிடாய் குறித்த ஸ்மிருதி இரானி கருத்தால் சர்ச்சை! 

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Minister Smriti Irani's statement on menstruation paid leave

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது என பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.  

அதேபோல், நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று (டிச. 13ம் தேதி) மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. இது தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ள பதில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று (டிச. 13ம் தேதி) நாடாளுமன்ற மாநிலங்களவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, நாட்டில் மாதவிடாய் சுகாதாரக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கொடுத்துள்ள பதில் பெண்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

மாநிலங்களவையில் எம்.பி. மனோஜ் குமார் ஜா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி ஒரு குறைபாடு (உடல் ஊனம்) இல்லை. இது இயற்கையாக பெண்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வு. மாதவிடாய் வராத ஒருவர் மாதவிடாய் குறித்து குறிப்பிட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்படும் பிரச்சினைகளை நாம் முன்வைக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

இதேபோல், கடந்த வாரம் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “அனைத்து பணியிடங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவதற்கான எந்த முன்மொழிவும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இந்தக் கருத்துகள் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

Next Story

'இவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே போதுமானது'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு 

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

"It is enough that the Dharmapura Adheena Kurumaka Sannithans support us" - Principal M.K.Stal's speech

 

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 75 வது பவளவிழாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழக முதல்வர், 'ஆலயங்களில் அன்னைத் தமிழ்; மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கோயில் நகைகள் மீட்பு; அறநிலையத்துறை சார்பில் 10 கலை கல்லூரிகள்; கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு; இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழமையான கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவு; திருக்கோவில் பணிகள் மேற்கொள்ள மண்டல மாநில அளவிலான வல்லுநர் குழு; தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்று சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

 

நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். வீர முத்துவேல் போன்ற அறிவியலாளர்களை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை தர வேண்டும். மாணவர்களின் பசியாற்றும் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஏக்கத்தைப் போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம் தான் காலை உணவுத் திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தர்மபுர ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் சகோதரத்துவத்தை விரும்பும் குருமகா சன்னிதானங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்குப் போதுமானது'' என்றார்.