Published on 03/03/2022 | Edited on 03/03/2022

மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்ட ப்யூச்சர் குழுமத்தின் கடைகளைக் கையகப்படுத்தியதன் மூலம் சுமார் 30,000 ஊழியர்களின் வேலை பறிபோகாமல் ரிலையன்ஸ் நிறுவனம் தடுத்துள்ளது.
பிரபல சில்லரை தொடர் நிறுவனமான ப்யூச்சர் ரீடெய்ல் கடும் கடன் நெருக்கடியில் சிக்கியது. இதனால் தனது 200 பெரிய கடைகளுக்கு வாடகை செலுத்த முடியாமல் திணறியது. இதனால் கடைகள் மூடப்பட்டு, சுமார் 30,000 ஊழியர்கள் வேலை இழக்கும் நிலை உருவானது. இந்த நிலையில், அந்நிறுவனத்தின் கடனை அடைக்க சுமார் 1,500 கோடி ரூபாய் வரை செலுத்தியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், ப்யூச்சர் ரீடெய்லின் 200 கடைகளையும் கையகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் வேலை பறிபோகாமல உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.