Skip to main content

'சிங்கம்' படப் பாணியில் போஸ் கொடுத்த காவலருக்கு அபராதம் விதித்த அதிகாரிகள்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

hk


இந்தியாவில், திரைப்படமும் தனிமனித வாழ்வும் ஏதாவது ஒரு வகையில் பின்னி பிணைந்தவைகளாகவே இருக்கின்றன. திரைப்படத்தில் வரும் உடைகள், சிகை அலங்காரங்கள், வார்த்தைகள், பஞ்ச் டயலாக்குகள் முதலியவற்றை நிஜ வாழ்க்கையிலும் சிலர் தொடர்ந்து பயன்படுத்தி வருவதையும் நாம் பார்க்கிறோம். தனி மனிதர்கள் அதிகம் பயன்படுத்தி வந்த இந்தச் சினிமா சினிமா மோகம் தற்போது அதிகாரிகள் வரை சென்றுள்ளது. 


இந்தியில் திரைப்படமான சிங்கம் படத்தில் அஜய் தேவ்கான் இரண்டு கால்களையும் விரித்து இரண்டு கார்களின் மீது நிற்பது போன்று ஒரு காட்சி இடபெற்றிருக்கும். இதே போல மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் அஜைய் என்பவர் இரண்டு அரசு கார்கள் மீது நின்று அதே போல் போஸ் கொடுத்ததால் தற்போது அவருக்குச் சிக்கல் வந்துள்ளது. தன்னை ஒரு ஹீரோவாக பாவித்துக்கொண்டு அவர் கார்களின் மீது ஏறி நிற்க, அதைப் புகைப்படம் எடுத்த சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்கள். உயர் அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்ற அந்தப் புகைப்படத்தால் தற்போது அந்தக் காவல் ஆய்வாளருக்கு 5,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள் உயர் அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்