Published on 29/11/2021 | Edited on 29/11/2021

இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர், பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கிடையே இன்று (29.11.2021) தொடங்கியது. இந்தநிலையில், மக்களவை கூடியதுமே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக முழக்கங்களை எழுப்பினர்.
இதனையடுத்து, மக்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பெரும்பாலான நாட்களில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.