Skip to main content

காற்றில் பறந்த விதிமுறைகள்! - 'கும்பமேளாவில்' ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021

 

kumbh mela

 

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 'மகா கும்பமேளா' கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி தொடங்கியது. வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில், தினமும் 10 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த மகா கும்பமேளாவில், கங்கை நதியில் நீராட நான்கு நாட்கள் மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. இதில், ஏற்கனவே இரண்டு நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், இன்று நீராடலுக்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படும் மூன்றாவது தினமாகும். இதனையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள், கங்கை நதிக்கரையில் குவிந்து வருகின்றனர். இருப்பினும், அங்கு கரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

 

கங்கை நதிக்கரையில் குவிந்துள்ளவர்களை கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றச் செய்ய முயற்சித்தால், நெரிசல் ஏற்படும் எனக் காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும், உத்தரகாண்ட் முதல்வர், கும்பமேளாவில் பங்கேற்றுள்ளவர்களை கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

 

இந்தநிலையில், கும்பமேளா நடைபெறும் ஹரித்துவாரில் கடந்த மூன்று நாட்களில் (ஏப்ரல் 10 - 13, மாலை 4 மணி வரை) 1,086 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், தினசரி லட்சக்கணக்கான மக்கள், ஹரித்துவாரில் குவிவார்கள் என்பதால், கரோனா பரவல் தீவிரமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்