கர்நாடகாவில் கரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு அதிகரித்து வருகின்றது. இன்று மட்டும் கர்நாடகாவில் 6,570 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 2,393 பேர் கரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் எண்ணிக்கை 9,73,275 ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,40,434ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 53,484 ஆக உள்ளது.
மேலும் இன்று மட்டும் 36 பேர் கரோனா காரணமாகப் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தமாக கரோனாவுக்கு 12,767 பேர் பலியாகியுள்ளனர். கரோனா அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்திற்கு வரும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அவசியம் கரோனா நெகட்டிவ் சான்றிதழைக் கொண்டுவர வேண்டும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.