Published on 05/08/2019 | Edited on 05/08/2019
ஜம்மு காஷ்மிர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பதட்டமான சூழல் நிலவி வந்த நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியது.
அவை தொடங்கியதும் இந்த விவகாரம் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்வதாக அறிவித்தார். மேலும் ஜம்மு காஷ்மிர் மாநிலத்தை, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதாகவும் அறிவித்தார். அதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு-காஷ்மீர் செயல்படும் என்றும். சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.