Skip to main content

தொடர் போராட்டம் காரணமாக இணையதள சேவையை முடக்கிய உ.பி அரசு!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வெற்றிகரமாக அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் உச்சத்தில் இருந்து வருகின்றது. போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உத்தரபிரதேசத்தில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், மாநிலத்தில் குடியுரிமை தொடர்பாக தினமும் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இணைய சேவையை அம்மாநில அரசு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தடை செய்துள்ளது. பாதுகாப்பு படையினர் மாநிலம் முழுவதும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கினால் 6 கோடி பரிசு - உ.பி அரசு அதிரடி!

Published on 25/01/2020 | Edited on 26/01/2020

ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வாங்கினால் அவர்களுக்கு ஆறு கோடி பரிசளிக்கப்படும் என்று உ.பி அரசு அறிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் வருகின்ற ஜூலை மாதம் ஜப்பானில் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் ஜப்பானுக்கு வருகை தர இருக்கிறார்கள்.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு அம்மாநில முதல்வர் பம்பர் பரிசை அறிவித்துள்ளார். அதன்படி ஜப்பான் ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு ஆறு கோடி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வெள்ளி பதக்கம் வாங்குபவர்களுக்கு 4 கோடியும், வெண்கலப் பதக்கம் வாங்குபவர்களுக்கு 2 கோடியும் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். 

Next Story

கலவரத்தில் ஈடுபட்டதாக கூறி 50 லட்சம் கேட்டு 130 பேருக்கு உ.பி அரசு நோட்டீஸ்!

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் சில வாரங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வெற்றிகரமாக அந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதை எதிர்த்து நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் உச்சத்தில் இருந்து வருகின்றது. போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உத்தரபிரதேசத்தில் பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக கூறி, 130 பேருக்கு அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கலவரத்தை ஏற்படுத்தியதற்காக 50 லட்சம் வரை அரசுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பாக கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடிதம் அனுப்பப் பட்டுள்ளது. அந்த கடிதத்தில் கேட்கப்பட்டுள்ள இழப்பீட்டு தொகையை தரவில்லை என்றால் உங்களின் சொத்துக்கள் ஏலம் விடப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.