Skip to main content

இந்தியாவின் மிகப்பெரிய கோமாளி ராகுல்காந்திதான்- சந்திரசேகரராவ் சாடல்!!

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
TELUNGANA

 

தெலுங்கானா சட்ட சபையை கலைக்க தெலுங்கானா அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டபின் சில மணி நேரத்திலேயே அடுத்த சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அறிவித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் காங்கிரசை வன்மையாக கண்டித்தார்.

 

TELUNGANA

 

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பொழுது ராகுல்காந்தி பிரதமர் மோடியை பாராளுமன்றத்தில் கட்டி பிடித்ததையும், கண்ணடித்ததையும் இந்த நாடே பார்த்தது. எல்லோருக்கும் தெரியும் ராகுல்காந்தி ஒரு கோமாளி என்று. டெல்லி காங்கிரசின் சட்ட வாரிசான ராகுல்காந்தி காங்கிரஸ் சுல்தானின் மரபை கொண்டவர் எனவே மக்கள் காங்கிரஸையும், ராகுலை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் எனக்கூறிய சந்திரசேகரராவ், காங்கிரசும் ராகுலும்தான் தெலுங்கானாவின் முதல் பெரிய எதிரி என சாடியுள்ளார்.   

சார்ந்த செய்திகள்