Skip to main content

''அந்த வேதனையை இன்னமும் உணர்கிறேன்''- சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் மோடி உரை!

Published on 15/08/2021 | Edited on 15/08/2021

 

'' I still feel that pain '' - Modi's speech at the Independence Day event!

 

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில், டெல்லியில் செங்கோட்டை பகுதிக்கு தேசியக்கொடி ஏற்றுவதற்காக இந்திய பிரதமர் மோடி வந்த நிலையில், மூவர்ண தேசியக் கொடியை ஏற்றும் முக்கிய நிகழ்வு நடைபெற்றது. முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி  செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பையும் ஏற்றார்.

 

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அதேபோல் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் அனைவருமே சமூக இடைவெளியுடன் குழுமியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி வைத்த பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

 

அவரது உரையாவது,  ''நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த அனைவரையும் நினைவுகூர்கிறேன். கரோனா காலத்தில் மக்களை காக்க போராடிய மருத்துவர்கள், தடுப்பூசி தயாரித்தவர்களுக்கு நன்றி. ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு நாட்டின் பெருமையை உலகறியச் செய்தவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்  (கைதட்டி உற்சாகப்படுத்தினர்). ஒலிம்பிக் களத்தில் புதிய வரலாறு படைத்தது மிகப் பெரிய விஷயம். வீ ரர்கள் நமது இதயத்தை வென்றதுடன் வருங்கால தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருக்கின்றனர். ஆகஸ்ட் 14 நாடு பிரிவினை அடைந்தபோது  பொதுமக்கள் கடும் துயரம் அனுபவித்தனர். சுதந்திரம் பெற்றபோது நாடு பிரிவினை அடைந்த அந்த வேதனையை இன்னமும் உணர்கிறேன். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலகத்திலேயே நம் நாடுதான் முதலிடத்தில் உள்ளது.

 

'' I still feel that pain '' - Modi's speech at the Independence Day event!

 

உலகின் முன்னணி நாடுகளில் கரோனா தடுப்பூசி எப்போது கிடைக்க தொடங்கியதோ அப்போதே இந்தியாவிலும் கரோனா தடுப்பூசி கிடைத்தது. நகரம் கிராமம் என்றில்லாமல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சி அடைய உள்கட்டமைப்புகள் பலப்படுத்தப்படும். நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக நிறைய திட்டங்களை வகுத்திருக்கிறோம். மின் இணைப்பு, ஓய்வூதியம், கேஸ் இணைப்பு உள்ளிட்டவற்றை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கிறோம். கடந்த இரண்டு வருடத்தில் நான்கு கோடி மக்களுக்குச் சுத்தமான குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அனைத்து கிராமங்களுக்கும் சாலை, அனைவருக்கும் வங்கி கணக்கு என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்கள் ஒரு சிலரை சென்று சேராமல் போகும் அவல நிலை இப்போது இல்லை. நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத்தை அளிப்பது அரசின் முக்கிய பணியாகும். ஏழைகளுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் நல்ல சத்தான அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

 

'மக்கள் மருந்தகம்' திட்டத்தின் மூலம் ஏழை மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கின்றன. நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் நல்ல மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.  பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் சேர்க்கை இடஒதுக்கீடு திட்டத்தை சமீபத்தில் தான் நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம். வடகிழக்கு மாநிலங்கள் ஜம்மு காஷ்மீர், லடாக், மலை சாதியினர் வாழும் பகுதிகளை தகவல்தொடர்பு கொண்டு இணைக்க வேண்டும். வடகிழக்குப் பகுதியில் சுற்றுலா, சாகச சுற்றுலா, பனை மரத் தோப்புகள்  ஆகியவற்றை வளர்க்க தனி கவனம் செலுத்தப்படும். ஆழ் கடல் பரிசோதனை மூலம் புதிய வளங்களை கண்டறியும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பின்தங்கிய 110 மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளுக்கு தனி கவனம் செலுத்தப்படுகிறது'' என்றார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

மெரினாவில் அருங்காட்சியகம்; மக்களின் பங்களிப்பை நாடும் தமிழ்நாடு அரசு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 The Tamil Nadu government will make a request to the people on Independence Day Museum at Marina

விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் எதிரே பிரம்மாண்ட சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு மகத்தானது. விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் தியாகத்தையும் பங்களிப்பையும் போற்றும் வகையில் சுதந்திர தின அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் 75ஆவது சுதந்திர தினவிழா உரையின் போது அறிவித்துள்ளார்.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரையின் எதிரில், பாரம்பரியக் கட்டடமான ஹுமாயூன் மஹால் கட்டடத்தில் சுமார் 80,000 சதுர அடி பரப்பளவில் பெரிய அளவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இந்த அருங்காட்சியகம் சிறப்பாக அமைந்திட அனைத்து தரப்பு மக்களின் பங்களிப்பும் தேவைப்படுகிறது. பொது மக்கள் தங்கள் வசம் உள்ள சுதந்திரப் போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்கள், கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், ஜெயில் வில்லைகள், இராட்டைகள், பட்டயங்கள், ஐ.என்.ஏ சீருடைகள், ஐ.என்.ஏ. அஞ்சல் தலை மற்றும் ரூபாய் நோட்டுகள் போன்ற இனங்களை நன்கொடையாக அளிக்கலாம். தங்கள் வசம் உள்ள அரிய பொருட்களை சென்னை அல்லது 23 மாவட்ட அருங்காட்சியகங்களுக்கு நேரிடையாக சென்று வழங்கலாம். இவ்வாறு வழங்கப்படும் பொருட்களுக்கு உரிய ஒப்புகைக் கடிதம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அருங்காட்சியக ஆணையரால் வழங்கப்படும்.

இவ்வாறான அரிய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் போது அதை வழங்கியவர்களின் பெயர்களும் இடம்பெறும். ஆகவே, பொதுமக்கள் தங்களிடம் உள்ள சுதந்திரப் போராட்டம் தொடர்பான அரும்பொருட்களை அமையவுள்ள வரலாற்று சிறப்பு மிக்க அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.