Skip to main content

எத்தனை நாள்தான் பொறுப்பது... தகாத உறவுக்கு முயன்ற வாலிபனை கட்டிவைத்து வெளுத்த பெண்...!

Published on 31/08/2019 | Edited on 31/08/2019

தன்னிடம் தவறாக நடக்க முயன்ற நபரை இளம்பெண் ஒருவர் மரத்தில் கட்டி வைத்து வெளுத்துக்கட்டும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் நால்கொண்டாவில் இளைஞர் ஒருவன் தொடர்ந்து ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் இதுகுறித்து அவரது கணவரிடம் கூற அந்த பெண்ணின் கணவர் இதனால் ஆத்திரம் அடைந்துள்ளார்.

 

 How many days is tolerate...women beat the men for trying illegal relationship How many days is tolerate...women beat the men for trying illegal relationship

 

இந்நிலையில் அஜாலாவாவி காலனியில் மீண்டும் அந்த பெண்ணிடம் அந்த நபர் தவறாக நடந்து கொள்ள முயன்றதை கண்ட அந்தப் பெண்ணின் கணவர் அவனைப் பிடித்து வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தில் கயிறினால் கட்டிப்போட்டார். கட்டி வைத்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய ஷூவையும், ஒரு குச்சியை அவரது மனைவியிடம் கொடுத்து சரமாரியாக அந்த இளைஞனை அடிக்கவைத்து அதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சியில் சம்பந்தப்பட்ட இளைஞன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு சரமாரியாக அந்த பெண்ணால் தாக்கப்படுகிறான்.

 

 How many days is tolerate...women beat the men for trying illegal relationship

 

காவல்துறையினர் வரும்வரை அடித்து வெளுத்துக்கட்டிய பிறகு அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். அண்மையில் தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் இதேபோல் பெண் ஒருவர், தன்னிடம் பாலியல் அத்துமீறலுக்கு முயன்ற இளைஞரை எச்சரித்த படியே அடித்த வீடியோ காட்சிகள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்த காட்சிகளும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அரசியல் வேறுபாடு வன்முறையாக மாறக்கூடாது'- கல்வீச்சுக்கு முதல்வர் கண்டனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
'Political difference should not turn into violence'- CM condemns stone pelting

ஆந்திராவில் தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வர இருக்கிறது. இதனால் அங்கு அரசியல் கட்சிகளால் தீவிர பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தனித்து களம் காண்கிறது. இதனையொட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த தேர்தல் பரப்புரையில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஜெகன்மோகன் ரெட்டிக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'ஆந்திர முதல்வர் மீது கல் வீசப்பட்டதைக் கண்டிக்கிறேன். அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக்கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் ஈடுபடும் போது நாகரீகத்தையும், பரஸ்பர மரியாதையையும் நிலைநாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Next Story

கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்; பெண்கள், மாணவிகள் 4 பேர் பலி

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
4 women who went to the temple drowned in the water and passed away

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா( 45) அவரது மகள் லலிதா (22). அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி காவியா (18) அவரது 17 வயது தங்கை   உட்பட 4 பெண்கள் இருசக்கர வாகனத்தில் குடியாத்தம் அருகே உள்ள வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்டுள்ளனர். வழிபாடு முடிந்த நிலையில் முனீஸ்வரன் கோவிலுக்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் உள்ள தண்ணீரில் நான்கு பெண்களும் இறங்கி உள்ளனர் 

ஏரியில் உள்ள சுழலில் சிக்கி நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கி கூச்சலிட்டுள்ளனர். மேலும் நான்கு பெண்களும் ஏரியில் மூழ்கிய நிலையில் அக்கம் பக்கத்தினர் இது குறித்து குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா, ஆகிய நான்கு பேர் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஒரே பகுதியைச் சேர்ந்த அம்மா, மகள் மற்றும் சகோதரிகள் என நான்கு பெண்கள் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.