Skip to main content

உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்காக ஒடிஷாவுக்கு வரவேற்கும் மணல் சிற்பம்!!!

Published on 23/11/2018 | Edited on 23/11/2018
odisha


2018 ஆம் ஆண்டுக்கான ஹாக்கி உலகக்கோப்பை  போட்டி இந்தியாவிலுள்ள ஒடிஷா மாநிலத்தில் வருகின்ற 28 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஹாக்கி தொடருக்காக ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார். அதில் பிரபல நடிகரான ஷாரூக் கான், நடிகை நயன்தாரா ஆகியோர் அந்த ஆல்பத்தில் நடனம் ஆடியிருந்தனர். 
 

இந்நிலையில், இந்த போட்டியை வரவேற்கும் விதமாக சர்வதேச மணல் சிற்பக்கலைஞர் சுதர்சன் பட்நாயக், கடற்கரையில் பாரம்பரிய படகு ஒன்றை உருவாக்கி அதற்கு வண்ணம் பூசியுள்ளார். மேலும் அந்த மணல் சிற்பத்தில், ”ஒடிஷாவுக்கு வரவேற்கிறோம்...ஹாக்கி ஆண்களுக்கான உலகக்கோப்பை 2018 ” என்று ஒடிஷாவில் நடைபெறும் இந்த விளையாட்டு போட்டியை பார்க்க வரவேற்றுள்ளார். மேலும் அந்த மணல் சிற்பத்தில் கார்த்திகை திருநாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்