Skip to main content

ஆறு மாதங்களில் எளிதாக கட்டுப்படுத்தக்கூடிய நோயாக கரோனா மாறும் - தேசிய நோய் கட்டுப்பாடு மைய இயக்குநர்!

Published on 16/09/2021 | Edited on 16/09/2021

 

CORONA

 

இந்தியாவில் கரோனா பரவல் தற்போது குறைந்துவருகிறது. இருப்பினும் மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துவருகின்றனர். இந்தநிலையில், தனியார் ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள தேசிய நோய் கட்டுப்பாடு மையத்தின் இயக்குநர் (NCDC) சுஜித் சிங், ஆறு மாதங்களுக்குப் பிறகு கரோனா பரவலை எளிதாக கட்டுப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "இந்த தொற்றுநோய் எங்களது பெரும்பாலான கணிப்புகளைப் பொய்யாக்கியுள்ளது. ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் நாம் எண்டமிக் நிலையை அடைவோம். கரோனா எண்டமிக்காக மாறினால், தொற்று பரவலை எளிதாக கட்டுப்படுத்தலாம். சுகாதார உள்கட்டமைப்பு மீதான அழுத்தம் குறையும். இறப்பு மற்றும் நோயற்ற தன்மை கட்டுப்பாட்டில் இருந்தால், நாம் நோய் பரவலைக் கட்டுப்படுத்தலாம்" என தெரிவித்துள்ளார்.

 

மேலும் சுஜித் சிங், "தடுப்பூசி, கரோனா வைரஸுக்கு எதிரான மிகப்பெரிய பாதுகாப்பாக இருந்துவருகிறது. தற்போது 75 கோடி மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் 70 சதவீதம் என்றால், இந்தியாவில் சுமார் 50 கோடி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி மட்டும் 30 - 31% நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. அப்படியெனில் ஒரு டோஸ் மட்டும் செலுத்திக்கொண்ட 30 கோடி மக்களுக்கு எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்