Skip to main content

கரோனாவை குணப்படுத்துகிறதா? - குடியரசு துணைத்தலைவர் வரை கவனம் ஈர்த்த ஆயுர்வேத மருந்து!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021

 

ANDHRA HERBAL MEDICINE

 

உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கரோனாவிற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. வேறு வேறு நோய்களுக்கான மருந்துகளே கரோனா சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆந்திர மாநிலம் கிருஷ்ணம்பட்டினம் கிராமத்தில் போனிகி ஆனந்தையா என்பவர் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்து கரோனவை குணப்படுதுவதாக தகவல் பரவியது.

 

மேலும் ஆந்திரா எம்.எல்.ஏ ஒருவரே தனது தொகுதிக்குள் குறிப்பிட்ட ஆயுர்வேத மருந்து கரோனவை குணப்படுத்துவதாக விளம்பரப்படுத்தி வருகிறார். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள், கரோனா கட்டுப்பாடுகளை மீறி மருந்து வாங்க குவிந்தனர். இதனால் கரோனா பரவல் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டது. இதனையடுத்து ஆந்திர அரசு, குறிப்பிட்ட ஆயுர்வேத மருந்து கரோனவை குணப்படுத்துகிறதா என்பது குறித்து ஆராய, அதனை சோதனைக்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கும் அனுப்பவும், மருந்தின் மூலக்கூறுகள் குறித்து ஆராய சித்த மருத்துவர்கள் அடங்கிய மருத்துவ குழுவையும் அனுப்ப முடிவு செய்தது.

 

அதேநேரத்தில் இந்த மருந்து குறித்து தகவலறிந்த குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, மருந்தின் செயல்திறன் குறித்து ஆராயுமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தையும், மத்திய ஆயுஷ் அமைச்சரையும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து ஆந்திர அரசின் நிபுணர்குழுவுடன் இணைந்து ஆயுர்வேத மருந்தை ஆராய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மருத்துவ குழு ஆந்திராவிற்கு விரைந்தது.

 

இந்தநிலையில் மருந்தின் மூலப்பொருட்கள் கிருஷ்ணம்பட்டியிலிருந்து ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும், அதிகமான கூட்டம் கூடியதால் மருந்து விநியோகம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெப்ப அலை முன்னெச்சரிக்கை; ஓ.ஆர்.எஸ் கொடுக்க ஏற்பாடு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
nn

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் வெப்ப அலைக்கான எச்சரிக்கைகளை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில நாட்களாகவே தமிழகத்தில் வெயில் செஞ்சுரி அடித்து வருகிறது. இந்தநிலையில் வெட்ப அலை காரணமாக மக்களுக்கு நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு ஓ.ஆர்.எஸ் கரைசல் வழங்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய அளவில் ஓ.ஆர்.எஸ் கரைசல் பாக்கெட்டுகள் இருப்பில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தாங்களாகவே சென்று இந்த ஓ.ஆர்.எஸ் கரைசலைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயக் கூலித் தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள் ஆகியோருக்கு இந்தக் கரைசலை விநியோகிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.