உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி மனித சமூகத்தை அச்சுறுத்தி வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் இந்நோய் காரணமாகப் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பல மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தைக் கண்டறியும் முயற்சியில் ஈடுப்பட்டு சில நாடுகள் மக்களுக்குத் தடுப்பு மருந்துகளைச் செலுத்தி வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்த வரையில் கரோனாவின் தாக்கம் ஆரம்பத்தில் அதிக அளவில் இருந்து வந்தது. அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. மத்திய அரசிலும் அமித்ஷா தொடங்கி அமைச்சர்கள் வரை யாரும் கரோனா தொற்றுக்குத் தப்பவில்லை. இந்நிலையில், கடந்த வாரம் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதன் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவருக்கு, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.