Published on 30/01/2021 | Edited on 30/01/2021

கர்நாடக மாநிலம், சாமராஜநகர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நான்கு மருத்துவர்களுக்கு கரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு செய்யப்பட்ட கரோனா பரிசோதனையில், கரோனா தொற்று உறுதி செய்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கரோனா தொற்று உறுதியான மருத்துவர்களுக்கு, லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால், அவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.
இதுகுறித்து சாமராஜநகர் மாவட்டத்தின் சுகாதாரத்துறை, "முதல் டோஸ் மட்டுமே கரோனாவிற்கு எதிரான பாதுகாப்பை வழங்கிவிடாது. இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்ட பிறகுதான், கரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகும்" எனத் தெரிவித்துள்ளது.