Skip to main content

"மீண்டும் ஒரு சவாலான சூழல் உருவாகி வருகிறது" - பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Published on 08/04/2021 | Edited on 08/04/2021

 

coronavirus prevention pm narendra modi discussion with cms

 

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக டெல்லியில் இருந்தவாறே பிரதமர் நரேந்திர மோடி இன்று (08/04/2021) மாலை காணொளி மூலம் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசின் சார்பில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

மாநில முதல்வர்கள் உடனான ஆலோசனையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "நாட்டில் மீண்டும் ஒரு சவாலான நிலைமை உருவாகி வருகிறது. கரோனா சூழலைச் சமாளிக்க உங்களின் பரிந்துரைகளை வழங்க வேண்டும். மகாராஷ்டிரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாகப் பரவி வருவது கவலையளிக்கிறது. வேறு சில மாநிலங்களிலும் கரோனா தொற்று இதே வேகத்தில் பரவி வருகின்றது. கரோனா முதல் அலையைக் கடந்து விட்டோம், தற்போது கரோனா இரண்டாவது அலையை எதிர்த்து நாம் போரிட வேண்டும். கரோனாவின் இரண்டாவது அலையின் பரவல் முதல் அலையை விட வேகமாக உள்ளது. கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் சாதாரணமாக இருப்பதாகவும், பெரும்பாலான மாநிலங்களில் நிர்வாகமும் தளர்வடைந்துவிட்டது" எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

 

coronavirus prevention pm narendra modi discussion with cms

 

தொடர்ந்து பேசிய பிரதமர், "அனைத்து சவால்களும் இருந்தபோதிலும் முன்பை விடச் சிறந்த அனுபவமும், வளமும் நம்மிடம் உள்ளன. 70% ஆர்டி- பிசிஆர் பரிசோதனை என்பது இலக்காக இருக்க வேண்டும். கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். கரோனா பரவுவதைத் தடுக்க கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு என்பது சிறந்த வழியாக இருக்கும். இரவு நேர ஊரடங்கு உள்ள பகுதிகளில் கரோனா ஊரடங்கு என்ற வார்த்தையைப் பயன்படுத்த வேண்டும். கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கரோனா ஊரடங்கு என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள். ஏப்ரல் 11- ஆம் தேதி முதல் ஏப்ரல் 14- ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். 'தடுப்பூசி செலுத்திக் கொண்டேன் கரோனா வராது' என அலட்சியமாக இருக்கக் கூடாது.

 

இரவு நேர ஊரடங்கை இரவு 09.00 மணி முதல் காலை 05.00 மணி வரை அமல்படுத்துவது நல்லது. கரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகள் பற்றிய விரிவான தரவு நம்மிடம் இருந்தால் உயிர்களைக் காப்பாற்ற அது உதவும். கரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி வெற்றி கொள்வோம்". இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரும் மனு; உயர் நீதிமன்றம் அதிரடி! 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Petition seeking impeachment of Kejriwal; High Court action

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த மார்ச் மாதம் 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இதற்கிடையே அரவிந்த் ஜெஜ்ரிவாலை டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி இந்து சேனா என்ற அமைப்பின் தேசிய தலைவர் விஷ்னு குப்தா என்பவர் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 

Next Story

திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
Arvind Kejriwal in Tihar Jail

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன் பின்னர் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கடந்த 28 ஆம் தேதி (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Arvind Kejriwal in Tihar Jail

மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி சார்பில் நேற்று (31.03.2024) ‘ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு -காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா, பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரெக் ஓ பிரையன், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி., ஜார்கண்ட் மாநில முதல்வர் சம்பாய் சோரன், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், ஜார்கண்ட் முன்னாள் முதல்வருமான ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் சரத்பவார், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, சுனிதா கெஜ்ரிவால் என 20க்கும் மேற்பட்ட கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Arvind Kejriwal in Tihar Jail

இந்நிலையில் அமலாக்கத்துறை காவல் முடிந்து அரவிந்த் கெஜிரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (01.04.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, ‘கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை நீட்டிக்க தேவையில்லை’ என அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.