Published on 29/04/2025 | Edited on 29/04/2025

மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கவினர் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், பாலக்காடு பகுதியில் மாமன்றக் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது, மாற்றுத்திறனாளிகள் மையத்திற்கு ஆர்எஸ்எஸ் தலைவர் பெயர் சூட்ட வேண்டும் பா.ஜ.கவினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கு, காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக, இருபிரிவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் மோதலாக மாறியது. அப்போது பா.ஜ.கவினரும், காங்கிரஸ் கட்சியினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதனால், மாமன்றக் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.