Skip to main content

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும்

Published on 26/12/2018 | Edited on 26/12/2018

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். 

 

gg

 

 

உத்ரப் பிரதேசம் மாநிலம், நொய்டாவில் பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்  மக்கள் தொகை பெருக்கத்தால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கிறது. மேலும் சமூக அமைதியையும் குலைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

 

 

சீனாவிற்கு இணையாக இந்தியாவிலும் மக்கள் தொகை பெருக்கம் அதிகமாகியிருக்கிறது. ஆனால் சீனாவில் இருப்பதைவிட இந்தியாவில் பரப்பளவும், இயற்கை வளங்களும் குறைவாக இருக்கிறது என தெரிவித்தார். 

 

 

மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கைகள் 22 இஸ்லாமிய நாடுகளில் தீவிரமாக செய்யல்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டுமே இது மதத்துடன் சம்பந்தப்பட்டு பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் தொகையை கட்டுபடுத்துவது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு எனது பதவியையும் இராஜினாமா செய்ய தயராக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தைரியம் இருந்தால் வாரணாசிக்கு சென்று மோடியுடன் சண்டையிடுங்கள்” - மத்திய அமைச்சர் சவால்

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Union Minister giriraj singh says Go to Varanasi and fight Modi if you have guts

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது எனப் பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.  

அதேபோல், நாடாளுமன்றத் தாக்குதல் நினைவு தினமான கடந்த 13 ஆம் தேதி மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. கடந்த 13ம் தேதி நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வழக்கம்போல் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, நாடாளுமன்ற வளாகத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த இரண்டு நபர்கள் வண்ணப் புகையை உமிழும் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து அவை முழுக்க வீசி அவைக்குள் தாவிக் குதித்து தப்பியோடியவர்களைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் வந்து, பாதுகாப்பு மீறல் குறித்து விளக்கம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். அமளியில் ஈடுபட்ட கனிமொழி உள்ளிட்ட 15 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்தியா கூட்டணியில் உள்ள யாருக்காவது தைரியம் இருந்தால் வாரணாசிக்கு சென்று பிரதமர் மோடியுடன் சண்டையிடுங்கள். நாடாளுமன்ற அத்துமீறல் பிரச்சனையை எழுப்புவதற்கான காரணம் இந்தியா கூட்டணியினர் அவர்கள் செய்த குற்றத்தை மறைப்பதற்கான கண்துடைப்பாகும். பீகார் முதலமைச்சருக்கும், அல்லது ஜனதா தளம் கட்சியில் இருக்கும் உள்ள தலைவர்களுக்கும் நான் சவால் விடுகிறேன். உங்களுக்கு தைரியம் இருந்தால் வாரணாசிக்கு சென்று பிரதமர் மோடியுடன் சண்டையிடுங்கள்” என்று கூறினார். 

Next Story

 “இந்துக்கள் ஹலால் உணவை உட்கொள்ளக் கூடாது” - மத்திய அமைச்சர்

Published on 18/12/2023 | Edited on 18/12/2023
Union Minister giriraj singh says Hindus should not consume Halal food

மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங், இந்துக்கள் ஹலால் இறைச்சியை உண்பதை விட்டுவிட்டு, ஒரே ஒரு முறையால் அறுக்கப்பட்ட இறைச்சியை (ஜட்கா) மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

பீகார் மாநிலம், பெகுசாராய் பகுதியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “மதத்தின் மீது பற்று கொண்டிருக்கும் இஸ்லாமியர்களை நான் மிகவும் மதிக்கிறேன். ஹலால் இறைச்சியை மட்டுமே உட்கொள்ளும் இஸ்லாமியர்களை நான் பாராட்டுகிறேன். இந்துக்களும் இதை புரிந்துகொள்ள வேண்டும். இந்துக்களும் இதே போன்ற உறுதிப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

இந்துக்கள் ஹலால் இறைச்சியை உண்பதன் மூலம் தங்களை சீரழித்துக் கொள்ளக்கூடாது. அவர்கள் எப்போதும் இந்து வழிபாடான ஒரே முறை அறுக்கப்பட்ட இறைச்சியை (ஜட்கா) மட்டும் உட்கொள்ள வேண்டும்” என்று கூறினார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.  

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பீகாரில் ஹலால் பொருட்களை தடை செய்யுமாறு கடந்த நவம்பர் மாதத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், சில தினங்களுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.