Skip to main content

பிறந்தது ‘2024’ புத்தாண்டு; நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Born '2024' New Year Kolakala celebration all over the country

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்று மாலை முதலே களைகட்டி வந்தது. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது.

அதே சமயம் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டிடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்க தயாராக இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியை எட்டியதில் இருந்து புத்தாண்டை நாட்டின் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். மேலும் கேக் வெட்டி ஆட்டம் பாட்டம் என புத்தாண்டை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் நாட்டின் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீசார் வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர். புத்தாண்டு பிறப்பையொட்டி கோயில்கள், தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகிறது. நக்கீரன் வாசகர்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். 

சார்ந்த செய்திகள்

Next Story

புத்தாண்டு தினம்; தடையை மீறி கடலில் குளித்ததால் நடந்த விபரீதம் 

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
New Year's Day on Tragedy happened due to breaking the ban and bathing in the sea

உலகின் பல்வேறு நாடுகளிலும் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று மாலை முதலே களைகட்டி வந்தது. இதனையொட்டி உலகின் முதல் நாடாக இந்திய நேரப்படி மாலை 04.30 மணியளவில் நியூசிலாந்தில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தை தொடர்ந்து உலகின் 2 ஆவது நாடாக ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. இந்திய நேரப்படி மாலை 06.30 மணியளவில் ஆஸ்திரேலியாவில் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு பிறந்தது.

அதே சமயம் 2024 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாகச் சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்கள், பாரம்பரிய கட்டடங்கள், விமான நிலையங்கள் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கடற்கரைகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற பொது இடங்களில் ஏராளமான இளைஞர்கள் ஒன்று கூடி புத்தாண்டை வரவேற்கத் தயாராக இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு 12 மணியை எட்டியதிலிருந்து புத்தாண்டை நாட்டின் பல்வேறு இடங்களில் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் பட்டாசு வெடித்து வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.

இதற்கிடையே, கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி அன்று சென்னை மாநகரக் காவல் சார்பில் புத்தாண்டு தினத்தையொட்டி பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதன்படி, ‘புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரை பகுதிகளில் மது குடிக்கக் கூடாது. அதையும் மீறி, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மெரினா உள்பட முக்கிய கடற்கரையில் மக்கள் அதிகம் கூட வாய்ப்புள்ளதால், புத்தாண்டையொட்டி கடலில் மக்கள் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை சாலையில் இரவு 8 மணிக்கு மேல் வாகனங்கள் செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது’ என்று கூறியிருந்தது. 

இந்த நிலையில், மெரினா கடற்கரையில் பள்ளி மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சம்ப்ரித் (16). இவர் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதற்காக, சம்ப்ரித் தனது நண்பர்கள் 4 பேருடன் இன்று (01-01-24) மெரினா கடற்கரையில் குளித்துள்ளார். 

இதையடுத்து அங்கு வந்த போலீஸ், கடலில் குளித்த சம்ப்ரித் உள்ளிட்ட 5 மாணவர்களை எச்சரித்து அனுப்பினர். ஆனால், அதையும் மீறி சம்ப்ரித் மற்றும் அவரது நண்பர்கள் கடலில் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வந்த ராட்சத அலையில் சிக்கி சம்ப்ரித் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், கடல் அலையில் சிக்கிய 2 மாணவர்களைப் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

புத்தாண்டு தினத்தில் சாதனை படைக்கவிருக்கும் இந்தியா!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
ISRO is going to make a record on New Year's Day!

உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தனது ஆய்வுகளை நடத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்தியா சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1-ஐ அனுப்பி அடுத்த சாதனையை நிகழ்த்தியது. 

விண்வெளியில் உள்ள கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக இஸ்ரேல் சார்பில் ‘எக்ஸ்போசாட்’ (எக்ஸ்-ரே போலாரிமீட்டர் சாட்டிலைட்) எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரேல் வடிவமைத்திருந்தது. மொத்தம் 469 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியிலிருந்து சுமார் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது.

இந்த ஆய்வு நடவடிக்கைகளை எடுப்பதற்காக ‘எக்ஸ்பெக்ட்’ (எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோகிராபி), ‘போலிக்ஸ்’ (எக்ஸ்ரே போலாரிமீட்டர்) ஆகிய 2 அதிநவீன சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை, விண்வெளியில் வியாபித்துள்ள ஊடுகதிர்களின் (எக்ஸ்ரே) துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருத்துக்களை வாயுக்களின் திரள் உள்பட பலவற்றை ஆராய உள்ளது. மேலும், இவை செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்ட பின்பு புவி தாழ்வட்டப் பாதைக்கு வந்து ஆய்வுகளை மேற்கொள்ளும். 

ஏற்கனவே விண்வெளியில் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய அஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தொடர்ச்சியாக இந்த திட்டம் செயல்படுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், விண்வெளி ஆய்வு செயற்கைக்கோளுடன் ‘பிஎஸ்எல்வி சி -58’ ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (01-01-24) காலை 9.10 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று (31-12-23) காலை 8:10 மணிக்கு தொடங்கியது.