Skip to main content

பாஜக கூட்டணியிலிருந்து விலகி பாஜகவுக்கு எதிராக 38 வேட்பாளர்களை களமிறக்கிய கட்சி...

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

bjp alliance break in uttarpradesh

 

 

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக கூட்டணியில் இருந்த சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி அந்த கூட்டணியிலிருந்து விலகி தனியாக போட்டியிடுவதாக அறிவித்து 38 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. உ.பி மக்கள் தொகையில் சுமார் 18 சதவிகிதம் உள்ள ராஜ்பர் சமூகத்தினர் ஆதரவை பெற்ற கட்சி என்பதால் அந்த கட்சி தனியாக போட்டியிடுவது பாஜகவுக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. தொகுதி பங்கீடு மற்றும் தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் போன்ற காரணங்களால் பாஜக கூட்டணியிலிருந்து சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.    

 

 

சார்ந்த செய்திகள்