உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 72 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 7000-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 2,00,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் 88 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகின்றது. இன்று மட்டும் மராாட்டியத்தில் 2,259 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,289 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மொத்த கரோனா பாதிப்பு 90,787 ஆக உள்ளது. இது சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.