Skip to main content

சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்திருத்தம் - குடியரசுத்தலைவர் ஒப்புதல்

Published on 22/04/2018 | Edited on 22/04/2018

நாட்டில் பேரதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள். ஜம்மு மாநிலத்தில் கத்துவா பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும், உன்னாவ் மாவட்டத்தில் 17 வயது சிறுமி பாஜக எம்.எல்.ஏ.வால் சீரழிக்கப்பட்ட சம்பவம், சூரத்தில் 11 வயது வன்கொடுமைக்குப் பின் கொல்லப்பட்டு, 86 காயங்களுடன் மீட்கப்பட்டது என சமீபத்திய செய்திகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

 

Ramnath

 

இந்தப் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கோரி நாடு முழுவதும் போராட்டங்கள் எழுப்பப்பட்டன. குற்றவாளிகள் பாதுகாப்பாக இருந்துவருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தநிலையில், அவர்களுக்கு எதிராகவும் கண்டனக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், போக்ஸோ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், மத்திய அமைச்சரவை அதற்கு நேற்று ஒப்புதல் அளித்தது.

 

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் மீது பாலியன் வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு தூக்குத் தண்டனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்ட இந்த சட்டத்திருத்தத்திற்கு இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளைக் கடந்தும் சிறுமிகளின் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது நாட்டிற்கே அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்