Skip to main content

குட்கா ஊழல் நடைபெறவில்லை என நான் கூறவில்லை! - காவல் ஆணையர் ஜார்ஜ் விளக்கம்!

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
george ss


குட்கா ஊழல் நடைபெறவில்லை என நான் கூறவில்லை, நடைபெற்றுள்ளது என முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை நொளம்பூரில் உள்ள வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இருக்கின்ற அனைத்து உண்மைகளின் அடிப்படையில் பேசுகிறேன். தி.மு.க வழக்கறிஞர் தனது மனுவில் எனது பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.

சென்னை காவல் ஆணையராக நான் இருந்த போது நான் யார் மீது குற்றம் சுமத்தவில்லை. குட்கா ஊழலில் நான் ஆணையராக இருந்த போது குட்கா ஊழல் தொடர்பான வதந்திகள் பரப்பப்பட்டது. எனவேதான் இது குறித்து அரசுக்கு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க கேட்டு கொண்டேன். குட்கா புகார் தொடர்பாக நான் யாரையும் சந்திக்கவில்லை, என்னையும் யாரும் வந்து சந்திக்கவில்லை.

குட்கா புகார் கூறப்பட்ட காலத்தில் நான் பணியில் இல்லை, சிபிஐயின் எஃப்.ஐ.ஆரில் என் பெயர் இல்லை. குட்கா விவகாரத்தில் 2016 ஏப்ரல், மே, ஜூனில் சோதனை நடந்தது. நான் பதவிக்கு வந்தது செப்டம்பரில்தான்.

33 ஆண்டுகளாக காவல்துறையில் சிறப்பான சேவையாற்றி பணியை முடித்துள்ளேன். குட்கா விவகாரம் விசாரணையில் இருப்பதால் நான் சந்திக்கும் பிரச்சனையை கூற விரும்பவில்லை. குட்கா விஷயத்தில் என்னைக் குறிவைத்து செயல்படுவது மிகவும் வருந்தத்தக்க உள்ளது.

குட்கா விவகாரத்தில் யாரும் பணம் பெறவில்லை என்று கூறவில்லை, ஆனால் யார் பெற்றார்கள் எனத் தெரியாது. குட்கா விவகாரத்தில் எனது பெயரைச் சேர்ந்ததில் 100 சதவீதம் ஏதோ நோக்கம் இருப்பதாக நினைக்கிறேன். வேண்டுமென்றே அறிக்கையில் சிலர் பெயர்களைச் சேர்த்து, ரகசிய அறிக்கையை கசிய விட்டுள்ளனர்.

அப்போதைய மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயக்குமார் சரியாக பணியாற்றாததால் அவரை கண்டித்துள்ளேன். சட்டவிரோத நடவடிக்கைகளை கூடுதல் ஆணையர் ஜெயக்குமார் மறைத்துள்ளார். குட்கா விவகாரம் தொடர்பாக அப்போதைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அறிக்கை அளிக்காதது ஏன்?எனக்கு கீழ் பணியாற்றிய அனைவரிடமும் கடுமையாக நடந்து, பணியை சிறப்பாக செய்ய அறிவுறுத்தியுள்ளேன். உளவுப்பிரிவு இணை ஆணையராக இருந்த வரதராஜூவுக்கு ஊழல் பற்றி ஏன் தெரியவில்லை?

குட்கா ஊழல் நடைபெறவில்லை என நான் கூறவில்லை, நடைபெற்றுள்ளது. சிபிஐ சோதனையில் வீட்டில்தான் இருந்தேன். நான் டிஜிபி ஆவதைத் தடுக்க நடந்த சதியாக நினைக்கிறேன். நானும், டிஜிபி ராஜேந்திரனும் குறிவைக்கப்படுகிறோம்.
 

சார்ந்த செய்திகள்