Skip to main content

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்ய முடிவு!!! -தங்க.தமிழ்செல்வன்

Published on 26/10/2018 | Edited on 26/10/2018

 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத்தொடர்ந்து 18 எம்.எல்.ஏக்கள் கலந்து ஆலோசித்துதான் முடிவு எடுக்கவேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். இந்நிலையில், தினகரன் தலைமையில் மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதற்குபின் தங்க. தமிழ்செல்வன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,


18 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம், 30 முதல் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்வோம் மேல்முறையீடு நடக்கும்போது இடைத்தேர்தல் வந்தால் அமமுக சார்பில் இடைத்தேர்தலை சந்திப்போம். 18 பேரும் விரைவில் சசிகலாவை சந்திக்க உள்ளோம். 3-வது நீதிபதி அளித்த தீர்ப்பில் நிறைய குறைகள் உள்ளதாக எங்களின் வழக்கறிஞர் கூறினார். மேல்முறையீட்டில் தகுதிநீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.

 

 

சார்ந்த செய்திகள்