அந்த அமைச்சர் தீவிரமான சினிமா ரசிகர். சிறுவயதில் 28 கி.மீ. சைக்கிள் மிதித்து பக்கத்து ஊருக்குச் சென்று தன் அபிமான நடிகரின் படங்களைப் பார்த்தவர். அப்போது சினிமா பாட்டுப்புத்தகமும் கையுமாகத்தான் திரிவார். இந்த சினிமா ரசனையும் வெறியும்தான் அவரைப் பொது வாழ்க்கையில் உச்சம் தொட வைத்தது. ஆனாலும், பிரஸ் மீட்டில் அந்த அமைச்சர் குறிப்பிட்ட ஒரு நடிகரை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், சுடு வார்த்தைகளால் விமர்சிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில், தனக்குப் பிடித்த நடிகர்களை மிக வெளிப்படையாகப் பாராட்டியும் வருகிறார்.
‘அந்த நடிகரின் மீது அப்படியென்ன கோபம்?’ என்று அந்த அமைச்சரிடமே கேட்டோம். “அவரோட நடிப்பைப் பத்தி என்னைக்காச்சும் நான் குற்றம் சொல்லிருக்கேனா? ஏன்னா.. அவரோட நடிப்பு அத்தனை சிறப்பா இருக்கும். கோமாளி அரசியல் பண்ணுறதுக்கு இங்கே நெறய பேரு இருக்காங்க. பொது வாழ்க்கைன்னு வந்துட்டா, நடிகரா இருந்தாலும் சரி.. யாரா இருந்தாலும் சரி.. அதற்கான தகுதி இருக்கணும். இல்லைன்னா.. தகுதியை வளர்த்துக்கணும். அவரு அப்படி கிடையாது. இன்னொரு விஷயம், அவரோட சொந்த வாழ்க்கை சம்பந்தப்பட்டது. எனக்கும் சினிமா இண்டஸ்ட்ரியில் நெறய நண்பர்கள் இருக்காங்க. அமைச்சர்ங்கிறதுனால கூடியமட்டிலும் என்கிட்ட அவங்க பொய் பேசமாட்டாங்க. அப்படி கேட்டதை வச்சித்தான் அவரோட குணாதிசயத்தை தெரிஞ்சிக்கிட்டேன்.
பிரபலமான அந்த நடிகை இந்த நடிகரை விழுந்து விழுந்து லவ் பண்ணுனாங்க. அட, குடும்பமே நடத்தினாங்க. ஆனா. அவரை இவரு கல்யாணம் பண்ணிக்கல. இப்ப அவங்க உசிரோட இல்ல. இன்னொரு ஹீரோயினும் இவரோட வலையில் விழுந்தாங்க. அப்புறம் சுதாரிச்சுக்கிட்டு வடக்கே போயி ஓஹோன்னு ஆனாங்க. அவங்களும் இப்ப இல்ல. இதுமாதிரி டிராஜடி ஸ்டோரி நெறய இருக்கு.
காதல் வேற.. கல்யாணம் வேறங்கிறது அவரோட பாலிசி. தன்னோட மனைவிங்கிறவ இப்படித்தான் இருக்கணும்னு தன் கண்ணுக்கு ‘ஸ்பெஷல்’ ஆகத் தெரிஞ்சவரை மொதமொதல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. இவரு எப்படின்னு அவருக்குத் தெரிஞ்சுபோச்சு. ஆளவிடுன்னு பெரிசா ஒரு கும்பிடு போட்டுட்டு தெறிச்சு ஓடிட்டாங்க. அடுத்து ஒரு நடிகையை மனைவி ஸ்தானத்துல கொண்டுவந்து வச்சாரு. அவரு மூலமா புள்ளைங்களும் பொறந்துச்சு. ஆனாலும்.. போகப்போக இவரோட சுயரூபம் வெளிப்பட்டதும், அந்தம்மா சிட்டா பறந்துட்டாங்க. வீட்ல தனக்குத் துணையா ஒருத்தர் வேணும்னு புருஷனைப் பிரிஞ்சிருந்த பழைய ஹீரோயினை வீட்ல சேர்த்து வச்சிக்கிட்டாரு. அப்பவும் இவரு அடங்கல. ஃபீல்ட்ல இருக்கிற ஃபேமஸ் ஹீரோயின் பின்னால லோலோன்னு சுத்தினாரு. ஒரு சீனியர் நடிகர் பண்ணுற வேலையா இதுன்னு சினிமாக்காரங்க எரிச்சலானாங்க. ஏன்னா.. இவரு யூத் இல்ல. அந்த ஃபேமஸ் ஹீரோயினோட சாய்ஸ் வேறயா இருந்துச்சு. அதுபோகட்டும். இவரை நம்பித்தானே அந்தப் பழைய ஹீரோயின், தன்னோட மகளோடு இவரு வீட்டுக்கே வந்து வருஷக்கணக்கா குடும்பம் நடத்தினாங்க. ஆனாலும்.. இவரு பண்ணுன காரியத்தை அவங்களால விவரமா வெளிய சொல்ல முடியல. இவருடைய நடவடிக்கையால் வெறுத்துப்போய், மகளைக் கூட்டிக்கிட்டு போயி தனியா வாழறாங்க.
இப்பச் சொல்லுங்க. சொந்த வாழ்க்கையில் இத்தனை ஓட்டையை வச்சிருக்கவரு, பொது வாழ்க்கையில எப்படி நேர்மையானவாரா இருக்க முடியும்? அமைச்சரா இருக்கிற என் மீதும் குற்றம் குறைகள் இருக்கும். ஆனா.. எந்தச் சூழ்நிலையிலும் பொது வாழ்க்கையில் மக்களை நேசிக்கிறவனாத்தான் எப்பவும் இருப்பேன். என்னால முடிஞ்ச நல்லதை எந்தப் பாகுபாடும் காட்டாம பலருக்கும் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன். எனக்குத் தெரிஞ்சு அந்த நடிகர் யாருக்கும் பெரிசா நல்லது பண்ணி நான் கேள்விப்பட்டதில்ல. அவரை நான் விமர்சிக்கிறதும் தப்பில்ல.” என்று நீண்ட விளக்கம் தந்தார்.
நடிக்கத் தெரிந்து வாய்ப்பு கிடைத்தால் நடிகராகிவிடலாம். நாலு பேருக்கு நல்லது பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருந்து, மக்களை நேசிப்பதில் போலி முகம் காட்டாமல் ‘ஒரிஜினல்’ சேவையாற்றினால், பொது வாழ்க்கையிலும் ‘விஸ்வரூபம்’ எடுக்கலாம்.