இன்று கூகுள் டூடுள் ஒருவரை சிறப்பித்து இருக்கிறது. இவர் சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர். 25 அக்டோபர் 1910 அன்று தெற்கு சீனாவில் பிறந்தார் டைரஸ் வோங் (Tyrus Wong). இவரின் 108-வது பிறந்தநாள் இன்று. இவரை சிறப்பிக்கும் வகையில்தான் கூகுள், டூடுள் செய்திருக்கிறது.
இவரின் தாய், சகோதிரியை எல்லாம் சீனாவிலே விட்டுவிட்டு, இவருக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது இவரின் தந்தை வோங்-ஐ அமெரிக்காவிற்கு அழைத்து வந்துவிட்டார். அதன்பின் அமெரிக்காவில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய வோங், சீன மொழியை பயின்றுள்ளார். இவருக்கு ஓவியத்தின்மீது அபாரமான காதல் இருந்திருக்கிறது. இதைப் பார்த்த அவரின் ஆசிரியர், அவருக்கு எப்படியாவது ஒவியம் பயிற்றுவிக்க வேண்டும் என்று சிந்தித்து இருக்கிறார். அதன்பின் அவர் மூலமாக ஓடிஸ் (Otis) எனும் கலை கல்லுரியில் முழு உதவித்தொகையுடன் ஓவியம் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அப்போது இளநிலை உயர்நிலை பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த வோங். ஓடிஸில் கிடைத்த வாய்ப்பைப் பையன்படுத்திக்கொள்ள, அவரின் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு ஓடிஸ் கலை கல்லுரியில் ஒவியம் பயில்வதற்கு சேர்ந்தார். அங்கு பயின்ற வோங் உலக அனிமேஷன் ஜாம்பவானான வால்ட் டிஸ்னியில் பயிற்சியாளராக இணைந்தார். அதன் பின் 1942-ல் வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வெளிவந்த பாம்பி (Bambi) எனும் படத்தில் தொழில் ரீதியாக முதலில் பணிபுரிந்தார். அதன்பின் ஏராளமானப் படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.
இவர் 30 டிசம்பர் 2016-ஆம் ஆண்டில் தனது 106-வது வயதில் இறந்தார். 2015-ல் இவருக்கு சாண்டியாகோ ஆசிய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது.