Skip to main content

"பத்து வருஷத்துக்கு முன்பே தீர்மானம் போட்டேனே... இனி யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியான்னு தான் அழைக்கணும்னு..." - வைகோ பகிரும் அரசியல்!

Published on 25/10/2022 | Edited on 27/10/2022
்ிு


தமிழக அரசியலை தன் பேச்சால் கட்டிப் போட்டிருக்கும் வைகோ தன்னுடைய இளம் வயதில் அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். வைகோ பேசிக்கொண்டிருக்கிறார் என்றால் மாற்றுக்கட்சியில் இருப்பவர்கள் கூட அவரின் பேச்சை கேட்க வருவார்கள் என்று கூறுவார்கள். அத்தகைய பேச்சாற்றலுக்குச் சொந்தக்காரரான அவர் நம்முடைய நக்கீரன் சரித்திரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது அரசியல் அனுபவங்களை கூறி வருகிறார். அந்த வகையில் மாநில உரிமைகள் தொடர்பாக அவர் பேசியுள்ளார். 

 

இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " பத்து வருசத்துக்கு முன்னாடி மதிமுக மாநாட்டுல தீர்மானம் போட்டேன். இந்தியாவ யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் இந்தியானு தான் அழைக்கணும். எல்லா ஸ்டேட்டுக்கும் சம உரிமை இருக்கணும்னு போன வருசத்துல கூட அதை பார்லிமெண்ட்ல பேசிருக்கேன். பெரியார், அண்ணா லட்சியங்களை காவு கொடுத்திடாமல், அதே நேரத்தில் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்துக் கொண்டு மற்ற மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிகளை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்கிற உணர்வை ஏற்படுத்திட வேண்டும். 

 

அந்தந்த மாநில கலாச்சாரங்களுடைய தனித்தன்மையைப் பாதுகாத்திட வேண்டும் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்தி எல்லோரும் ஒன்று சேர்ந்து இந்தியா என்கிற துணைக் கண்டத்தை வழி நடத்திட இதுதான் சரியான வழியாக இருக்குமென்று கொள்கை வழியிலே லட்சிய வழியிலே தடம் புரளாமல் இருக்கக்கூடிய என்னுடைய நண்பர் திராவிட இயக்கத்தினுடைய இன்றைய தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் ‘திராவிட மாடல்’ எனும் சரியான நிலைப்பாட்டை எடுத்து மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறார்கள். இதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்" என்றார்.