கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்று அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் கனவுகள் மெய்பட மாணவர்களை பட்டை தீட்டி வரும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு கனவு ஆசிரியர் என்ற விருதும், கூடவே இத்தனை கால உழைப்புக்காகவும் தொடந்து கனவு காணுங்கள் மாணவர்களிடம் அந்த கனவுகளை மெய்பட செய்யுங்கள் என்று ஊக்கப்படுத்தவும் ரூ. 10 ஆயிரம் ரொக்க பரிசும் வழங்கி வருகிறது அரசு.
ஆசிரியர்களை ஊக்கப்படுத்தி மாணவர்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்று தன்னார்வ இளைஞர்கள் ஒருபக்கம் முனைப்புக் காட்டி வருகின்றனர். ஆனால் பல அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தடையாக இருப்பது கழிவறைகள் தான். காலையில் மகிழ்ச்சியோடு பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகள் நேரம் ஆக ஆக இயற்கை உபாதைகளை கழிக்க இடம் தேட வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்க படிப்பில் இருந்து கவணம் சிதறிவிடுகிறது. அதனால் அந்த மாணவ, மாணவிகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் ஏனோ பல பள்ளி நிர்வாகங்கள் அதை கண்டுகொள்வதில்லை. சின்னப் பிரச்சணை தானே என்பது போல இருந்துவிடுகிறார்கள்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 3 ஆயிரம் மாணவிகள் படிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு போதுமான கழிவறை வசதிகள் இல்லை என்பதால் கடந்த ஆண்டு 150 மாணவிகள் பள்ளியிலிருந்து வெளியேறினார்கள். அதன் பிறகாவது கல்வித்துறை நிர்வாகம் கழிவறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறதா என்றால் இல்லை. இப்படி பல பள்ளிகளில் பிரச்சனைகள் தலைவிறித்தாடுகிறது.
இந்தநிலையில் தான் திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியராக இருப்பவர் க.செல்வசிதம்பரம் இந்த ஆண்டு கனவு ஆசிரியர் விருதினை பெற்றுள்ளார். அந்த விருதுடன் கொடுக்கப்பட்ட ரூ. 10 ஆயிரம் ரொக்கப்பரிசை மாணவ, மாணவிகளின் கழிவறை மேம்பாட்டுக்காக கல்வித்துறை அதிகாரியிடமே கொடுத்துவிட்டார். மாணவர்களின் மனசை புறிந்து கொண்ட நல்ல ஆசிரியர்.
இவர் இந்த பள்ளிக்கு வந்து சில ஆண்டுகளில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தும் வகையில்தான் மாணவர்களை ஊக்கப்படுத்தி தனது சொந்த முயற்சியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது அறிவியலை மாணவர்களுக்கு வழங்கினார். விவசாய பகுதி என்பதால் நடவு செய்யும் கருவியை மாணவர்களை வைத்தே உருவாக்கினார். செங்கல் தொழில் செய்வோரின் குழந்தைகள் அதிகம் படிக்கிறார்கள் என்பதை அறிந்து செங்கல் செய்யும் கருவியை மாணவர்களின் கண்டுபிடிப்பாக உருவாக்கினார். இப்படி பல கருவிகளை உருவாக்க மாணவர்களுக்கு துணையாக நின்றார். இதனால் கடந்த ஆறு ஆண்டுகளாக மாணவர்கள் இன்ஸ்பேர் விருது கிடைத்த்து. அதே போல அறிவயில் கண்டுபிடிப்புகளுக்காக அண்ணா பல்கலைக்கழகம் 'குருசேத்ரா' விருது வழங்கியது. மேலும் பல்வேறு விருதுகளை மாணவர்களுக்கு தனியார் அமைப்புகளின் விருதுகள் வாங்க காரணமாக இருந்துள்ளார். மேலும் இவரை பாராட்டி பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சமீபத்தில் பள்ளிக்கல்வி துறை சார்பில் வழங்கப்பட்ட கனவு ஆசிரியர் விருதுக்கு க.செல்வசிதம்பரம் தேர்வு செய்யப்பட்டு திருச்சியில் நடந்த விழாவில் விருதும் அதன் பரிசு தொகை ரூபாய் 10 ஆயிரமும் பெற்றார். இதனையடுத்து ஆசிரியர் க.செல்வசிதம்பரத்தை கல்வித்துறை மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் பாராட்டினார். பள்ளியில் காமராஜர் பிறந்த தினவிழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட வட்டார கல்வி அலுவலர்கள் சொக்கலிங்கம் மற்றும் முருகபாஸ்கர் ஆகியோரிடம் கனவு ஆசிரியர் விருது பெற்ற க.செல்வசிதம்பரம் தான் கனவு ஆசிரியர் விருதுடன் பெற்ற பரிசுத்தொகை 10 ஆயிரம் பணத்தை தனது பள்ளியில் மாணவர்கள் பயன் படுத்தும் கழிப்பறையை மேலும் மேம்படுத்த நன்கொடையாக வழங்கினார்.
கல்வி துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சிறப்பு விருந்தினர்கள் பெருந்தன்மையோடு ஆசிரியர் க.செல்வசிதம்பரத்தை கட்டி தழுவி வாழ்த்து தெரிவித்தனர். இந்தநிலையில் தான் பணியாற்றும் பள்ளியின் கழிப்பறையை மேம்ப்படுத்த கனவு ஆசிரியர் க.செல்வசிதம்பரம் தான் பெற்ற பரிசு தொகையை அளித்ததை அறிந்து அவருக்கு பேஸ்புக் மற்றும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிக்கிறது.
இதுகுறித்து பெற்றோர்களும் மாணவர்களும்.. ஆசிரியர் செல்வசிதம்பரம் வந்த பிறகு பள்ளி வகுப்பறையை ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கினார். அதற்கான செலவில் 3 பங்கு ரோட்டரியும் ஒரு பங்கு ஆசிரியர் சொந்த செலவிலும் செய்தார். அதே போல நாம இருக்கிற இடம் சுத்தமா இருக்கனும் என்பதற்காக வகுப்பறைகளில் சிலவற்றை தன்னார்வ உதவியுடன் டைல்ஸ் பதிச்சார். மாணவர்களை அறிவியல் ஆர்வத்தை தூண்டி கண்டுபிடிப்புகளை செய்ய செய்தார். இப்ப மாணவ, மாணவிகளின் கழிப்பறைகளை மேம்படுத்த நிதி வழங்கி உள்ளார். இதைப் பாரத்து இன்னும் பலர் மேலும் உதவிகள் செய்ய தயாராகிட்டு இருக்காங்க என்றனர்.
கனவு ஆசிரியர் செல்வசிதம்பரம்.. நம்ம வீட்ல கழிவறைகளை ரொம்ப சுத்தமா வச்சு பயன்படுத்துறோம் அது போல நம்ம பள்ளி மாணவ, மாணவிகளும் பயன்படுத்தனும் என்று முன்பே விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறோம். இப்ப இருக்கிற கழிவறைகள்லயே டைல்ஸ் பதிச்சு மேபடுத்தி சுத்தமா வச்சுக்கனும் என்பதற்காக தான் விருதுடன் கொடுத்த தொகையை கொடுத்தேன். நம் பள்ளி மாணவர்களும் நம் குழந்தைகள் தான் என்றார்.
வாழ்த்துகள் கனவு ஆசரியருக்கு..