சமீபத்திய பாராளுமன்ற நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் அவர்கள்...
கொடுக்கப்படாத ஃப்ளையிங் கிஸ் ஸ்மிருதி இரானியால் பாராளுமன்றத்தில் அரசியலாக்கப்பட்டது. மணிப்பூரில் வெளியான வீடியோவிலேயே இவ்வளவு கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளது என்றால், இன்னும் வெளியாகாத விஷயங்கள் எவ்வளவு இருக்கும்? மணிப்பூர் முதலமைச்சரே சொல்கிறார் இதுபோன்ற நூற்றுக்கணக்கான சம்பவங்கள் அங்கு நடைபெற்றுள்ளது என்று. பாஜகவினர் தேசத்துரோகிகள் என ராகுல் காந்தி சரியாகச் சொன்னார். பாஜகவினர் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டுள்ளனர். மணிப்பூர் கலவரங்களுக்கு அரசின் ஆதரவு இல்லையென்றால் ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை?
இவர்கள் நடவடிக்கை எடுக்காததால் தான் இதில் அரசியல் இருக்கிறது என்கிறோம். மணிப்பூரில் நடந்தது அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட வன்முறை. சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில் மக்களைத் துன்புறுத்துவது தான் தீவிரவாதம். 24 மணி நேரமும் இவர்களுடைய சிந்தனை மதம் குறித்தே இருக்கிறது. மக்கள் துன்பப்படுவதை மணிப்பூர் முதலமைச்சரால் நிறுத்த முடியவில்லை. ஆனால் அவரை மாற்றுவதற்கு பாஜக தயாராக இல்லை. சொந்த மாநிலத்தில் மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
கொஞ்சமாவது மனசாட்சி இருந்திருந்தால் மணிப்பூர் முதலமைச்சரை இவர்கள் மாற்றியிருப்பார்கள். மணிப்பூர் மக்கள் யாரும் அவரை விரும்பவில்லை. ராகுல் காந்தி யாருக்கும் ஃப்ளையிங் கிஸ் கொடுத்தது போல் வீடியோவில் தெரியவில்லை. ஆனால் இவர்கள் பொய்யைப் பரப்புகின்றனர். மணிப்பூரில் அவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்ட விஷயத்தை விட்டுவிட்டு, எந்த விஷயத்துக்காக இவர்கள் சபாநாயகரிடம் புகார் கொடுக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். சொந்த மக்களையே இவர்கள் இன அழிப்பு செய்கிறார்கள்.
பிரதமரைப் பேச வைப்பதற்காகத் தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அவர் பேசுவதற்கு தயாராக இல்லை. பஸ்ஸில் 10 கிலோமீட்டர்கள் சென்றுவிட்டு வெறும் 2 கிலோமீட்டர்கள் மட்டும் நடப்பது தான் அண்ணாமலையின் நடைபயணம். இந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு என்ன மக்கள் நலத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது? சிலிண்டர் விலையை உயர்த்தியது, மக்கள் சொத்துக்களை அதானியிடம் கொடுப்பது தான் சாதனையா? இவர்கள் வாயைத் திறந்தாலே பொய்தான் பேசுகிறார்கள். இவர்கள் நாட்டை மொத்தமாகக் கொள்ளையடிக்கிறார்கள்.