சாஷ்டாங்கமாக விழுறதுன்னா என்னாங்கன்னு கேட்டா டக்குன்னு ஞாபகத்துக்கு வருபவர் ஓ.பி.எஸ்.தான். அந்த ஓ.பி.எஸ். தற்போது தன்னை ஜெயலலிதா இடத்தில் வைத்து தனது ஆதரவாளர்களை காலில் விழவைக்கிறார்.
ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது சட்டப்பேரவையில் தங்கள் மானியக் கோரிக்கைகள் வரும்போது அமைச்சர்கள் ஜெயலலிதா காலில் விழுந்து செல்வார்கள். தற்போது காலில் விழும் கலாச்சாரம் இல்லை என்று அக்கட்சியினர் சொல்லி வந்தாலும், அதனை அக்கட்சியின் அமைச்சர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.
சட்டப்பேரவையில் இன்று நடந்த மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பதில் அளித்துப் பேசினர்.
முன்னதாக இந்த மூன்று அமைச்சர்களும் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை அவரது அறையில் சந்தித்து சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர். நீங்க துணை முதல் அமைச்சரல்ல, முதல் அமைச்சர்தான். நீங்க சொல்றதைத்தான் நாங்க கேட்போம் என்று சொல்லி வாழ்த்து பெற்றனராம். இந்த விஷயத்தை அறிந்த இ.பி.எஸ்., அப்படியா என்று அதிர்ச்சியடைந்தாராம்.