இந்தியாவை வெள்ளையர்கள் ஆண்டுக்கொண்டிருந்தபோது, நேதாஜியை கைது செய்து வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். அவருடைய வாழ்கையில் இந்த எபிஸோட் ஒரு திரைப்படமாக எடுத்தோம் என்றால் செம விருவிருப்பாக இருக்கும். ஆங்கிலேயர்கள் நேஜாதி தப்பித்துவிடவே முடியாது என்று நினைத்துகொண்டிருக்கும்போது, அங்கிருந்து தப்பித்து ஜெர்மனிக்கு சென்று அடோல்ஃப் ஹிட்லரையே சந்தித்தார் என்றால் பாருங்களேன் அவ்வளவு புத்திசாலியான மனிதர், தந்திரமானவரும் கூட.
சுபாஷ் சந்திர போஸின் வீடு கொல்கத்தாவில்(கல்கட்டாவில்) உள்ளது. அவருடைய சொந்த வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டு, ஆங்கிலேயர்கள் 24 மணிநேரமும் அவரை கண்காணித்து வந்தனர். இங்கிருந்து தப்பித்துவிட்டால், கண்டிப்பாக நமக்கு அது பெரிய சிக்கலில்தான் முடியும் என ஆங்கிலேயர்கள் கணக்குப் போட்டார்கள். ஏன் என்றால் அப்போது நேஜாஜி மிகவும் வலிமை வாய்ந்தவராக இருந்தார். வெளியே சென்றால் கண்டிப்பாக ஆங்கிலேயர்களுக்கு ஒத்துவராதவர்களுடன் சேர்ந்துகொண்டு நம்மை எளிதில் வீழ்த்திவிடுவார் என்று ஆங்கிலேயர்கள் நினைத்தார்கள்.
ஆங்கிலேயர்கள் நினைத்தததை போன்றே நடந்தது. சுபாஷ் சந்திர போஷ் ஜனவரி 16ஆம் தேதி 1941 ஆம் ஆண்டு வீட்டுக்காவலில் இருந்து தப்பித்தார். வீட்டு வேலையாள் போன்ற மாறுவேடத்தில், ஆங்கிலே காவலர்களின் முகத்தில் கரியை பூசினார். தனது வீட்டிலேயே இருக்கும் காரில், பெஷாவர் வரை சென்றார். அங்கு சென்ற பிறகு மூன்றாம் ஆகா கான் உதவியுடன் அப்கானிஸ்தானுக்குள் நுழைந்தார். அப்போது காப்பீட்டு முகவர் தோற்றத்தில் இருந்தார். அதன் பிறகு மீண்டும் தன்னுடைய தோற்றத்தை மாற்றிக்கொண்டு இத்தாலிய பாஸ்போர்ட்டில் மாஸ்கௌக்கு சென்றார். அங்கு சென்றபின், இத்தாலியில் ரோம், இதன் பின் ஜெர்மனியிலுள்ள பெர்லினுக்கு சென்று சர்வாதிகாரி அடோல்ஃப் ஹிட்லரை சந்தித்தார்.
உலக தலைவர்கள் பலர் தப்பித்திருக்கின்றனர். ஆனால், நேதாஜி தன்னுடைய எதிரியிடமிருந்து தப்பித்த இந்த உண்மை கதை அவர் எவ்வளவு புத்திசாலி மற்றும் தந்திரம் வாய்ந்தவர் என்பதை வெளிப்படுத்துகிறது. இந்த தப்பித்தல் பற்றி நேஜாதி குறிப்பிட்டிருப்பது என்ன என்றால், என்னால் வெட்டியாக பிரிட்டிஷ் என்னுடைய காலத்தை ஓட்டமுடியாது. அதற்கு பதில் அவர்களிடம் சண்டையிட்டு உயிரிழப்பதே மேல் என்று கூறினாராம்.