பிப்ரவரி 28- தேசிய அறிவியல் தினம்
கிழக்கில் சூரியன் உதிப்பதும், மேற்கே சூரியன் மறைவதும் கடவுளின் உத்தரவு, "கடவுள் நினைத்தால்தான் குழந்தை பிறக்கும்" என்பது போன்ற மனிதனின் மூடநம்பிக்கைகளை உடைத்தது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்தான். "சூரியனை பூமி சுற்றிக்கொண்டு இருப்பதால்தான் காலம் காலை, மாலை மாறி, மாறி வருகிறது, பருவநிலை மாறுகிறது என்கிற உண்மைகளையெல்லாம் சொன்னவர்கள் அறிவியல் அறிஞர்கள்தான். அப்படிப்பட்ட உண்மைகளை அவர்கள் சொல்லாமல் இருந்தால், நம்மை இன்றளவும் ஆன்மீகவாதிகள் ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.
அந்த அறிவியலை பாமரனும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகதான் "தேசிய அறிவியல் தினம்" என்கிற ஒரு தினத்தை உருவாக்கியுள்ளது இந்தியா. தேசிய அறிவியல் தினம் கொண்டாட முக்கிய காரணமாக இருந்தவர் இஸ்ரோ என்கிற விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக இருந்த வி.ஆர். கோவாரிக்கர்தான். இவரே தேசிய அறிவியல் தினம் என்று ஒரு நாளை நாம் கடைபிடிக்க வேண்டும் என இந்திய அரசை வலியுறுத்தியவர். 1988ல் அவர் கருத்தை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28ந்தேதியை இந்திய அறிவியல் தினம் என அறிவித்தது அரசு.
பிப்ரவரி 28 ந்தேதியை அறிவிக்க என்ன காரணம்?
இந்தியாவின் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் இந்த நாளை சிறப்பு நாளாக கொண்டாடுகிறார்கள். அறிவியல் ஆராய்ச்சிகளே உலகத்தை பலகட்டமாக முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றுள்ளது. இதை யாராலும் மறுக்க முடியாது.