Skip to main content

முதல்வர் மாவட்டத்தில் கந்துவட்டி மாஃபியா!

Published on 20/02/2019 | Edited on 04/03/2019

ந்துவட்டி சண்முகத்தையும், அவர் தம்பி மணியையும், சேலம் மாவட்ட சங்ககிரியின் மக்கள் ""த்ரீ தௌசண்ட் செவன் பிரதர்ஸ்'' என்று உச்சரிக்கிறார்கள். சங்ககிரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயி களும், சிறுதொழில் அதிபர்களும் தங்கள் சொத்து சுகங்களை இந்த த்ரீ தௌசண்ட் செவன் பிரதர்ஸிடம் பறிகொடுத்துவிட்டு புலம்புவதற்கும் ஜீவனற்று நடுத்தெருவில் நிற்கிறார் கள்.

சங்ககிரியில் உள்ள முகில் முட்டும் கட்டடங்கள் பலவும், பரந்து கிடக்கும் நிலங்களும், ஸ்ரீபி.எஸ்.ஜி. கல்வி நிலை யங்களும், சண்முகம் டிரான்ஸ் போர்ட் சர்வீசும், ஸ்பின்னிங் மில்லும் தொழில் சாம்ராஜ்ஜியமும், குட்டி போட்ட கந்து வட்டி மீட்டர் வட்டிக்காக, "3007 பிரதர்ஸ்' மிரட்டி எழுதி வாங்கியவையே என்கிறார்கள் மக்கள்.

kathuvati

இந்த 3007 பிரதர்ஸ் தான் சமீபத்தில் சென்னைக்கு வந்து பத்திரிகையாளர்களிடம் தங்களை சங்ககிரி விவசாயிகள் என்று அறிமுகம் செய்து கொண்டு ""எங்களோட சொத்துகளையும் நிலங்களையும் கேட்டு முதலமைச்சர் எடப்பாடியின் மைத்துனர் வெங்கடேஷ் மிரட்டுகிறார்'' என்று சொன்னவர்கள்.

இவ்வளவு பெரிய கந்துவட்டிப் பேரரசர்கள் எதற்காக முதலமைச்சரின் மைத்துனர் வெங்க டேசன் மீது புகார் கூற வேண்டும்?

""என் தாத்தா வழி உறவினரான மோகன் என்பவர் இந்த 3007 பிரதர்ஸிடம் கந்து வட்டிக்கு பணம் வாங்கிவிட்டு, மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். எல்லாவற்றையும் இழந்து விடுவோம் என்ற நிலையில்தான் என்னிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். நான் இதுவரை பஞ்சாயத்து செய்ததில்லை என்னால் செய்யவும் முடியாது. நீங்கள் உடனே போலீசில் புகார் செய்யுங்கள் என்றுதான் சொன்னேன். மோகனும் அவர் மகனும் டி.எஸ்.பி. அசோக்குமாரிடம் புகார் அளித்தார்கள். இதனால் பயந்து போன 3007 பிரதர்ஸ் சென்னைக்கு போய் என்னைப் பற்றி அபாண்டமாகப் பொய்ப்புகார் கொடுத்திருக்கிறார்கள். என்னைப் பற்றி சங்ககிரி மக்களிடம் கேட்டுப் பாருங்கள்'' என்றார் முதலமைச்சரின் மைத்துனர் வெங்கடேஷ்.

3007 பிரதர்ஸால் எப்படிப் பாதிக்கப்பட்டார் மோகன்? அவரிடமே கேட்டோம்.

dinesh""சங்ககிரி நகரின் மையப்பகுதியில் எங்களுக்கு சொந்தமான இரண்டே கால் ஏக்கர் நிலத்தை அடகு வைத்து 3007 பிரதர்ஸிடம் 15 லட்சம் கடன் வாங்கினோம். அப்போது நிரப்பப்படாத பத்திரங்கள், பாண்டு பேப்பர்கள், காசோலை களையும் வாங்கிக் கொண்டார்கள். ஒரு வருடம் வட்டியை மிகச் சரியாக கட்டினோம். மறுவருடம் வட்டி கட்டச் சிரமமாகிவிட்டது.

முதலும் வட்டியும் 50 லட்சம் வந்துவிட்டது. அடகு வைத்த நிலத்திற்கு நாலரைக் கோடி விலை பேசி விற்க முடிவு செய்தோம். ஆனால் 3007 சண்முகம், நிலம் முழுகிவிட்டது என்று கொஞ்சங்கூட நெஞ்சில் ஈரமில்லாமல் சொன்னார். அப்புறம்தான் நானும் என் மகன் தினேசும் டி.எஸ்.பி. அசோக்குமாரிடம் புகார் அளித்தோம். இதை அறிந்ததும் 3007 பிரதர்ஸ் காவல்துறை உயர்மட்டத்தில் தஞ்சமடைந்துவிட்டார்கள். தேவையில்லாமல் முதலமைச்சர் மைத்துனரையும், இதில் இழுத்துவிடுகிறார்கள்'' என்றார் மோகன்.

3007 பிரதர்ஸ் மீது போலீஸில் புகார் செய்த முதல் நபர் மோகன்தான். அவர் துணிச்சலுடன் புகார் கொடுத்திருப்பதைக் கேள்விப்பட்ட பிறகு தான், 3007 பிரதர்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகார் கொடுக்கும் துணிச்சல் வந்திருக்கிறது.

3007 பிரதர்ஸான சண்முகம், மணி மற்றும் சண்முகத்தின் மகன் கார்த்திகேயன், தங்கை பர்வதம் ஆகிய நான்குபேர் மீதும், சங்ககிரி அம்மாபேட்டையை சேர்ந்த ராமசாமி என்பவர் சங்ககிரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
kathuvati
அம்மாப்பேட்டை ராமசாமியை அவர் இல்லத்தில் சந்தித்தோம்.

""நான் மைன்ஸ் தொழில் பண்றேன். 1997-ல் 3007 பிரதர் ஸிடம் மாதத்திற்கு மூன்று வட்டி என்று 25 லட்சம் கடன் வாங்கினேன். இதற்காக என் வீட்டையும் மைன்ஸ் தொழிலில் என்னுடைய 20 சதவீத பங்கு களையும் எழுதி வாங்கிக்கொண் டார்கள். மாதம் 75 ஆயிரம் வட்டி கட்டினேன். ஒரு மாதம் கூட பாக்கி வைக்கவில்லை. 2012இல் அசல் கடனைக் கட்டு வதற்காக போனபோதுதான் எனக்குத் தெரிந்தது போலி பத்திரம் தயாரித்து என்னுடைய வீட்டையே 3007 பிரதர்ஸ் கிரயம் செய்திருந்தார்கள். அசலையும் வட்டியையும் கட்டியபிறகும் "இன்னும் ஒரு கோடி தர வேண்டும். உடனே வீட்டை காலி செய்' என்று மிரட்டினார்கள். அவர்களிடம் பலபேர் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். சண்முகம் பிரதர்ஸின் கல்லூரி இருக்கே அந்த 15 ஏக்கர் கூட மனோகர் என்பவரிடம் வட்டிக்காக மிரட்டி எழுதி வாங்கியதுதான். பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதியான அவர்களை யார் என்ன செய்துவிட முடியும்? இப்போதுதான் துணிச்சல் வந்து புகார் கொடுத்திருக்கிறேன்'' என்றார் ராமசாமி.

குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெறு வதற்காக 3007 பிரதர்ஸின் வீட்டுக்குச் சென்றோம். இருவரும் தலைமறைவாகிவிட்டனர். செல்போன் களும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தன.

""3007 பிரதர்ஸ், பல கோடி செலவில் புதுசா ஒரு ஆடம்பரப் பங்களா கட்டினாங்க. 10.2.19 அன்னிக்கித்தான் கிரகப் பிரவேசம் நடந்தது. அதுக்கே அவங்க ரெண்டுபேரும் வரலீங்க. அரெஸ்ட் பண்ணிடுவாங்களோ என்ற பயம். தலைமறைவாயிட்டாங்க'' என்றார்கள் அக்கம் பக்கத்தினர்.

3007 பிரதர்ஸ் மீதான புகார்கள் குறித்து டி.எஸ்.பி. அசோக்குமாரிடம் கேட்டோம்.

""அவர்களை விசாரணைக்கு கூப்பிட்டோம். தலைமறைவாகிவிட்டார்கள். தேடிக் கொண்டி ருக்கிறோம். அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போதுதான் புகார்களோடு வரத் தொடங்கி யுள்ளனர்'' என்றார் டி.எஸ்.பி.